tamilnadu

img

ஆன்லைன் வகுப்பு பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை:
ஆன்லைன் வகுப்புகளுக்கு விதிமுறைகள் வகுத்த தமிழக அரசின் அரசாணையை பள்ளிகள் பின்பற்றவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மாதம் 30 ஆம் தேதி ஆன்லைன் வகுப்புக்கானவழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை அரசாணையாக வெளியிட்டது. அதில் முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி, ஆப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்பு நடத்தலாம் என்றும்தொலைக்காட்சி மூலமாக பாடங்களை நடத்தவும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்றும் 1-8 ஆம் வகுப்பு வரை 1.30 மணி நேரம், 9-12 ஆம் வகுப்பு வரை 3 மணி நேரம் வகுப்பு நடத்தலாம் என்றும் ஒவ்வொரு வகுப்புகளுக்கான நேரம் 30 முதல் 45 நிமிடங்களாக தான் இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நாளைக்கு 6 வகுப்புகள் மட்டுமே எடுக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் இடையே 10 முதல் 15 நிமிடங்கள் வரை இடைவேளை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புக்கு தடைகோரியமனு  திங்களன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் வகுப்புகளுக்கு விதிமுறைகளை வகுத்த தமிழக அரசின் அரசாணையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும். அனைத்து பள்ளிகளும் அரசின் விதிமுறைகளை பின்பற்றும் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

;