world

அமெ., இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உருவாக்கிய புதிய பாதுகாப்பு அமைப்பு

வாஷிங்டன், செப்.17- அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய  மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டாண் மையை (AUKUS) அறிவித்துள்ளது.   அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் ,  ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரி சன் ஆகியோர் இந்த கூட்டு அறிவிப்பை வெளியிட்டனர்.  இந்த நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கை யில், இதன்மூலம் மூன்று நாடுகளுக்கு இடையேயான சந்திப்புகள் மற்றும் ஈடுபாடு களின் புதிய கட்டிடக்கலை மற்றும் வளர்ந்து  வரும் தொழில்நுட்பங்கள் (பயன்பாட்டு AI, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் கடல் சார்ந்த திறன்கள்) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் இந்த  முயற்சி இந்தோ-பசிபிக்  பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மையை நிலைநாட்ட உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், “புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டாண்மை  (AUKUS) என்பது நமது தொழில்நுட்பம், நமது விஞ்ஞானிகள், நமது தொழில் மற்றும் பாதுகாப்பு படை ஆகியவை இணைந்து  பாதுகாப்பான பகுதியை வழங்குவதற்கு ஒத்துழைப்பு தருவதாகும்.  புதிய மேம் படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டாண்மை யின் முதல் பெரிய முயற்சி, ஆஸ்திரேலியா விற்கு அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வழங்குவதாகும். இதை அடைவதற்கான சிறந்த வழியைத் தீர்மானிப்போம். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழை ப்புடன் இந்த நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவில் உருவாக்க உத்தே சித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

;