world

img

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு 12.87 கோடியை தாண்டியது.

உலக முழுவதும் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை, மூன்றாம் அலை என உருவாகி வேகமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த கொண்டே இருக்கிறது. தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்த பிறகும், கொரோனாவின் தாக்கம் குறையாமல் உள்ளது.
இந்நிலையில் உலக அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,87,95,232 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்று பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,818,826 ஆக உள்ளது. தற்போது 22,058,067 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,10,97,154 கோடியை தாண்டியது. 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரை 1,21,48,487 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,62,502 பேர் உயிரிழந்துள்ளனர

;