world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. டான்பாஸ் பகுதியில் உக்ரைனின் நிலை மிகவும் மோசமாக உள்ளது எனவும் ரஷ்ய படைகள் அனைத்து திசைகளிலும் முன்னேறிக்கொண்டுள்ளன எனவும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குபேலா கூறியுள்ளார்.
  2. ரஷ்ய தடைகள் விளைவித்த கடும் விலை உயர்வு காரணமாக பட்டினியில் இருக்கும் மக்களுக்கு பிரான்ஸ் “உணவு கூப்பன்களை” தரத் தொடங்கி யுள்ளது.
  3. விலைகுறைவான ரஷ்ய எரிசக்தியை நிறுத்துவதால் ஐரோப்பிய மக்கள் நிரந்தரமாக அதிக விலை தரு வதற்கு தயாராக இருக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் வெஸ்டாகர் கூறியுள்ளார்.
  4.  ஆப்பிரிக்க தினத்தை முன்னிட்டு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரவ் ஏற்பாடு செய்த விருந்தில் அனைத்து ஆப்பிரிக்க தேசங்களின் தூதுவர்களும்  பங்கேற்றனர்.
  5. மிகப்பெரும்பாலான ஆப்பிரிக்க தேசங்கள் உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்கா வுக்கு அடிபணிந்து ரஷ்யாவை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  6. ரஷ்யா தனது கடனை வெளிநாடுகளுக்கு ரூபிள் மூலம் தருவதாக அறிவித்துள்ளது.  அமெரிக்காவின் வெள்ளை இன நிற வெறியர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக போரிடச் செல்வது குறித்து அமெரிக்க உள்துறை அமைச்சகம் கவலை தெரி வித்துள்ளது. அவர்கள் திரும்பி வந்தால்  அமெரிக்கா வில் பெரும் கலகம் வெடிக்கும் எனஅஞ்சப்படுகிறது.
  7. ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய முக்கிய நகரமான மரியபோலில் ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை ரோபோக்கள் மூலம் ரஷ்யா அகற்றி வருகிறது.
  8. ரஷ்யா கடனை திருப்பி கட்டுவதை வங்கிகள் மூலம்  தடுத்து “செயற்கை திவால்” எனும் நிலையை உருவாக்க அமெரிக்கா முயல்கிறது என கைல் ஷோஸ்டக் எனும் நிதி ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.  
  9. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் எரிவாயு விலை அரசு நிர்ணயித்த ஒரு நாள் குறைந்தபட்ச ஊதியத்தை தாண்டிவிட்டது.
  10. மரியபோலை தொடர்ந்து ரஷ்யப் படைகள் பொபாஸ்நயா/இசியம்/செவரொடோனட்ஸ்க் ஆகிய உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி யுள்ளன. இது ரஷ்யப் படைகளின் முக்கிய  வெற்றியாக கருதப்படுகிறது.
;