world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் சேர துருக்கி முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அனைத்து  உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நேட்டோவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க  இயலும். ரஷ்யாவுடனான போர் காரணமாக வலி மிகுந்த  பொருளாதார முடிவுகளை எடுக்க வேண்டியுள்ள தாக உக்ரைன் அரசாங்கம் மக்களை எச்சரித் துள்ளது.
  2. ரஷ்ய எண்ணெய் வேண்டாம் என நிராகரித்த ஐரோப்பிய நாடுகள் எண்ணெய் எங்கே கிடைக்கும்  என தேடி அலைகின்றன.
  3. இப்பொழுது இஸ்ரேலை நாடியுள்ளன. அமெரிக்காவின் பஃபலோ எனும் இடத்தில் 10 பேரை சுட்டுக்கொன்ற நபர் உக்ரைன் நாஜிக்களை போலவே சின்னம் அணிந்திருந்தார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
  4. ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யப் பிரச்சனையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என ஹங்கேரி குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேசச் சந்தையில் கோதுமை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
  5. ரஷ்ய உக்ரைன் போரின் பல விளைவுகளில் இதுவும் ஒன்று! இத்தாலியின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ஈ.என்.ஐ. ரஷ்ய எண்ணெய்யை ரூபிள்  மூலம் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.
  6. அமெரிக்காவின் தலைமையில் 14 தேசங்களை கொண்ட மிகப்பெரிய ராணுவ பயிற்சி ரஷ்ய எல்லைக்கு அருகே நடக்கிறது.
  7. ரஷ்யாவை மிரட்டும் முயற்சி! போலந்தில் பணவீக்கம் 12%. எனவே மக்கள் தமது நுகர்வு தேவைகளை குறைத்துக் கொள்ள தொடங்கியுள்ளனர்.
  8. எனினும் ரஷ்ய எதிர்ப்பில் போலந்து முன்னணியில்! ரஷ்யாவின் பொருளாதாரம் விரைவில் உறுதியான நிலையை அடையும் என ஐரோப்பிய ஆணையம் மதிப்பீடு செய்கிறது. அமெரிக்கா பாவம்!
  9. அமெரிக்காவை கண்மூடித்தனமாக பின்பற்றும் ஐரோப்பா பரிதாபம்!
;