world

img

வட கொரியாவுக்கு புடின் பயணம்

பியாங்யாங், ஜூன் 18- ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த 24 ஆண்டுகளில் முதல் முறையாக வடகொரியாவிற்கு பயணம் மேற் கொண்டுள்ளார்.

இந்த  இரண்டு நாள் பயணத்தில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிரான வடகொரியா வின் நிலைப்பாட்டை தொடர்ந்து ஆதரிப்பதாகவும் அந்நாட்டுடன் தொடர் பொருளாதார மற்றும் அறி வியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ரஷ்யா ஒத்துழைக்கும் எனவும் தெரி வித்துள்ளார்.

கடந்த ஆண்டு வடகொரியா ஜனாதி பதி கிம் ஜோங் உன் ரஷ்யாவுக்கு பயணம் செய்தபோது ரஷ்யாவின் விண்வெளி  நிலையத்திற்கு சென்று அந்நாட்டு  ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பங் கள் குறித்து அறிந்து கொண்டார். மேலும் அறிவியல் தொழில்நுட் பத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்ததோடு ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு வடகொரியா வர  அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத் தக்கது.

மேலும் இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங் கள் மேற்கொள்ளப்படலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது. 

இந்த பயணத்தை முடித்துவிட்டு புத னன்று  (ஜூன் 19 )  வியட்நாமிற்கு   புடின் இரண்டு நாள் பயணமாக செல்வ தாக ரஷ்ய வெளியுறவுத்துறை தெரி வித்துள்ளது.

;