world

img

சோவியத் ரஷ்யாவின் தளபதி - தலைவர் !

சோவியத் ரஷ்யாவின் ராணுவ மற்றும் அரசியல் தலைவராக இருந்தவர் கிளிமென்ட் வோரோஷிலோவ்.  ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) ஆர்வலரான இவர், ரஷ்ய உள்நாட்டுப் போரில் பங்கேற்று திறமையான தளபதியாக திகழ்ந்தார். இவர், 1919 இல் சாரிட்சினை (தற்போது வோல்கோகிராட்) பாதுகாக்கும் பணியிலிருந்த போது, அந்த பிராந்தியத்தில் அரசியல் ஆணையராக இருந்த ஜோசப் ஸ்டாலினுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பின்பு, 1925 இல் ஸ்டாலின், இவரை மக்கள் பாதுகாப்பு ஆணையராகவும், 1926 இல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் நியமித்தார். மேலும், 1935 இல் சோவியத் யூனியனின் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டார் வோரோஷிலோவ். 1945-47 இல் ஸ்டாலினின் பிரதிநிதியாகச் செயல்பட்டு, ஹங்கேரியில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைவதை மேற்பார்வையிட்டார். போருக்குப் பிறகும் இவர் ராணுவ விவகார நிபுணராகவும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். 1953 இல் ஸ்டாலின் இறந்த பிறகு, சுப்ரீம் சோவியத் (தலைமைக் குழு) தலைவரான வோரோஷிலோவ், 1957 வரை அரசாங்க விவகாரங்களில் தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டார். இப்பதவியிலிருந்து 1960 இல் ஓய்வு பெற்ற இவர், 1969 டிசம்பர் 2 அன்று மாஸ்கோவில் காலமானார்.