world

நேட்டோ படைப் பிரிவுகளை அதிகரிக்கும் நடவடிக்கை

பிரஸ்ஸல்ஸ், ஜூலை 8- ஏகாதிபத்திய நாடுகளின் ராணுவக்கூட்ட மைப்பான நேட்டோ 35 முதல் 50 கூடுதல் படைப்பிரிவுகளை உருவாக்கப்போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

பிரஸ்ஸல்ஸ், ஜூலை 8- ஏகாதிபத்திய நாடுகளின் ராணுவக்கூட்ட மைப்பான நேட்டோ 35 முதல் 50 கூடுதல் படைப்பிரிவுகளை உருவாக்கப்போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  2024 ஜூலை 5  நேட்டோவின் 75 ஆவது ஆண்டு நிறைவாகும்.

இதனை முன்னிட்டு  ஜூலை 9 - 11 வரை நடைபெறவுள்ள உச்சிமாநாட் டில் நேட்டோ நாடுகளின்  தலைவர்கள் பல புதிய திட்டங்களை அறிவிப்பார்கள் எனவும் அவை உலகளவில் நடைபெற்று வரும் போர்களை தீவிரப்படுத்தும் வகையிலான முடிவுகளாக இருக்கும் எனவும் அதில் ஒரு முக்கிய அறிவிப் பாக நேட்டோ படைப்பிரிவுகளை அதிகரிப்பது குறித்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.  நேட்டோவின் ஒவ்வொரு  படைப்பிரிவும்  3,000 முதல் 7,000 ராணுவ வீரர்களை கொண்டுள் ளது.

இந்நிலையில் மேலும் 35 முதல் 50 படைப் பிரிவுகளாய் உருவாக்க திட்டமிடுவது உலக அமைதியை அச்சுறுத்துவதுடன் ரஷ்யாவின் பாதுகாப்பை மேலும் அச்சுறுத்தலுக்கு உள் ளாக்கி நேட்டோ நாடுகளுடன் நேரடிப்போரை உருவாக்கிவிடும் ஆபத்து உள்ளது.  2022 ஆம் ஆண்டு முதல் ஏகாதிபத்திய நாடுகளான அமெ ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனை பகடையாக பயன்படுத்தி ரஷ்யாவுடன் போர் புரிந்து வருவதுடன் நேட்டோ படை மூலம் நேரடிப் போருக்குத் தயாராக உள்ளதாக அச்சு றுத்தலை உருவாக்கியுள்ளது.

 நேட்டோ  35 முதல் 50 படைப்பிரிவுகளை உரு வாக்கும் திட்டம் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தாலும் அதற்கான ராணுவ வீரர்களை எந்தெந்த நாடுகள் கொடுப்பது என்ற விவரங்கள் வெளியாகவில்லை. தேவைப் பட்டால் இருக்கும் வீரர்களையே பல பிரிவுக ளில் இருந்து பிரித்து புதிய பிரிவுகளை உரு வாக்கலாம் அல்லது கூடுதல் வீரர்களை நிய மிக்கலாம்  எனக் கூறப்படுகிறது.

 மேலும் ரஷ்யாவுடன் போரை துவங்கி னால் ஈரான் உள்ளிட்ட நாடுகளும் போரில் ஈடு படலாம் அவ்வாறு நடந்தால் அந்நாடுகளின் ஏவு கணைத்  தாக்குதல்களை எதிர்கொள்ள ஏவு கணை எதிர்ப்பு ஆயுதங்களை அதிகளவு உருவாக்க அவ்வமைப்பு திட்டமிட்டுள்ள தாகவும்  கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்கா, ஈரான், இந்தியா மற்றும் மத்திய கிழக்கு, தெற்காசியாவில் உள்ள வளரும்  நாடுகள் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய ஒத்துழைப்புக்களை உருவாக்கு வதுடன் உலக அமைதியை  வலியுறுத்தி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து வருகின்றன.

இவ்வேளையில் ஒட்டுமொத்த உலகிலும் நங்கள் மட்டுமே மனிதாபிமானம் மிக்க நாடுகள் என்ற பிம்பத்தை கட்டமைத்துக்கொண்டே  அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கு நாடு கள் நேட்டோ மூலம் போர்ச்  சூழலை தீவிரப் படுத்தி உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி  வருகின்றன.