world

img

பாலஸ்தீனத்திற்கு அமைதிப் படையை அனுப்ப தயார் : மலேசிய பிரதமர்

கோலாலம்பூர், ஜூலை 2- பாலஸ்தீனத்திற்கு (காசாவிற்கு) இந்தோனேசியாவுடன் இணைந்து கூட்டு அமைதிப் படையை அனுப்ப தயாராக இருப்பதாக மலேசிய அரசு  தெரிவித்துள்ளது. 

“பாலஸ்தீனத்தில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலையை கருத்தில் கொண்டு ஐ.நா அவை அமைதிப்படையை அனுப்ப உத்தரவிட்டால் இந்தோனேசியாவுடன் இணைந்து  அனுப்ப விரும்புகிறேன் என மலேசிய பிரதமர் அன்வர் தெரிவித்துள்ளார்.

உடல்நிலை குறைபாட்டின் காரணமாக சிறு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள புதிதாக தேர்வாகியுள்ள இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோவிடம் நலம் விசாரித்ததுடன் தற்போதைய அரசியல் பிரச்சனைகள், குறிப்பாக சர்வதேச அரங்கில் இந்தோனேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் ஜனாதிபதி பிரபோவோவின் சமீபத்திய பங்கு,  ஒத்துழைப்பு ஆகியவற்றை பற்றி மூன்று நிமிடம் பேசியதாகவும் அன்வர்  தெரிவித்தார். 

மேலும் “மலேசியா-இந்தோனேசியாவின் சர்வதேச அமைதி காக்கும் பணியின் யோசனையை தான் வரவேற்பதாகவும், மேலும் இந்த ஒத்துழைப்பை ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு விரிவுபடுத்தலாம் எனவும் மலேசிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

;