world

பிரேசில் : இன்று ஜனாதிபதித் தேர்தல்

பிரேசிலியா, அக்.1- பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ள பிரேசிலின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு ஞாயிறன்று நடைபெறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வலது சாரி ஜனாதிபதி போல்சானாரோ ஜனாதி பதிப் பொறுப்பில் இருந்தார். இந்தக் கால கட்டத்தில் பொருளாதார நெருக்கடி தீவிர மானது. கொரோனா பெருந்தொற்று நெருக் கடியை மேலும் அதிகப்படுத்தியது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் போல்சானரோ சர்ச்சைக்குரிய முடிவு கள் பலவற்றை எடுத்தார். அவர் மீண்டும் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் போட்டியில் இறங்கியிருக்கிறார். போல்சானரோவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதியும், இடதுசாரி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா நிற்கிறார். இதுவரை யில் நடத்தப்பட்ட அனைத்துக் கருத்துக் கணிப்புகளிலும் லூலாதான் வெற்றி பெறுவார் என்று வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பாக நடத்தப் பட்ட, தேர்தலுக்கு முன்பாக நடந்த கடைசி ஆய்வில் அவருக்கு செல்லத்தக்க வாக்குகளில் 50 விழுக்காடு கிடைக்கும் என்று தெரிய வந்திருக்கிறது. இதனால் முதல் சுற்றிலேயே அவர் வெற்றி பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சுற்றில் யாருக்கும் வெற்றி கிடைக் காவிட்டால், இரண்டாவது சுற்றிற்கான வாக்குப்பதிவு அக்டோபர் 30 ஆம் தேதி யன்று நடைபெறும். தென் அமெரிக்காவில் மீண்டும் இடதுசாரிக் காற்று வீசிக் கொண் டிருக்கிறது. கொலம்பியா-வெனிசுலா எல்லை திறக்கப்பட்டுள்ளது. பிரிக்கும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்கும் அமெ ரிக்கா வழி தெரியாமல் நிற்கிறது. லூலாவின் வெற்றி உலகம் முழுவதும் உள்ள இடது சாரிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கப் போகிறது.

;