போர்ட்ஆப் பிரின்ஸ்,மார்ச் 5- ஹைட்டியில் கடந்த சில நாட்க ளாக ஆயுதக் கும்பல்கள் தாக்கு தல்கள் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்கு தலை நடத்தி அதனை கைப்பற்ற முயன்றுள்ளன. இந்த முயற்சி அங்கிருந்த பாதுகாப்புப் படையால் முறியடிக்கப்பட்டுள்ளது. ஹைட்டியில் ஆயுதக் கும்பல்க ளால் அந்நாட்டின் தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் உட்பட பல இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இரு நாட்களுக்கு முன்பு அந்நாட்டின் இரண்டு மிகப்பெரிய சிறையில் தாக்குதல் நடத்தி கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிக ளை தப்பியோட வைத்தன. இந் நிலையில் அந்நாட்டில் 72 மணி நேர அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. ஆயுதக் கும்பல்களுக்கும் நாட்டின் பாதுகாப்புப் படைக்கும் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு மோசம டைந்துள்ள நிலையில் தப்பித்த சிறைக் கைதிகளை மீண்டும் கைது செய்ய அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற் கொள்ள அந்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் அந்நாட்டின் பாது காப்பை உறுதி செய்ய பிரதமர் ஏரியல் ஹென்றி ஐ. நா சபை யின் பாதுகாப்புப் படையின் உத வியை பெறும் முயற்சியில் ஈடு பட்டுள்ளார்.