world

img

பாரா ஒலிம்பிக்- 2024 இந்தியாவுக்கு 2 ஆவது தங்கம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் 17-ஆவது  சீசன் பாரா ஒலிம்பிக் தொடரின் ஆடவர்  பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார் - பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேல் ஆகியோர் மோதினர். தொடக்கம் முதலே அதிரடி யாக விளையாடிய இந்திய வீரர் நிதேஷ் குமார் 21-14, 18-21, 23-21  என்ற செட்களில் டேனியலை வீழ்த்தி  தங்கப்பதக்கத்தை வென்று அசத்தி யுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக (2 தங்கம்,  3 வெள்ளி, 4 வெண்கலம்) உயர்ந்துள் ளது.