world

img

பிரான்ஸ் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்

பாரிஸ், ஏப்.7- பிரான்ஸ் முழுவதும் கொந்தளிப்பான நிலை நிலவினாலும், புதிய ஓய்வூதியக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிடிவாதம் பிடிப்பதால், நடப்பாண்டில் 11ஆவது முறையாக வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். மீண்டும் தொடர் போராட்டங் கள் வெடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்சின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அந்நாட்டுப் பிரதமர் எலிசபெத் போர்னைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது புதிய ஓய்வூதியக் கொள்கையை நிறுத்தி வைத்து விட்டுப் பேசலாம் என்று தொழிற்சங்கங்கள் கோரியபோது, அதற்கு ஜனாதிபதி ஒப்புக் கொள்ள மாட்டார் என்று  அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாடாளு மன்றத்தை மீறி மக்கள் விரோத ஓய்வூதியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தீவிரமாக இருக்கிறார். புதிய ஓய்வூதியக் கொள்கையின்படி, ஒருவர்  முழு ஓய்வூதியம் பெற வேண்டுமானால் 43 ஆண்டு கள் பணிபுரிந்திருக்க வேண்டும். மேலும் ஓய்வு பெறுவதற்கான வயது 62இல் இருந்து 64 ஆக  உயர்த்தப்படும். பெரும்பாலான தொழிலாளர் களுக்கு ஓய்வூதியத்தை மறுப்பதற்காகவே இந்தப் புதிய கொள்கை கொண்டு வரப்பட்டி ருப்பதாகத் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டி யுள்ளன. இந்தக் கொள்கைக்கு மக்கள் மத்தி யிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்களும், தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் போராட்டக் களத்தில் இருக்கிறார்கள்.

ரசு முன்வைத்தது. அப்போதிலிருந்து இது வரையில் 10 முறை நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் நடத்தப்பட்டுள்ளன. 11ஆவது வேலை நிறுத்தம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்திருக் கிறது. பிரதமர் தலைமையிலான குழுவிடம்  நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த தால் இந்த வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங் கள் அறைகூவல் விடுத்தன. தங்கள் பணி யிடங்களை விட்டு வெளியேறி, நாடு முழுவதும் நடக்கும் எதிர்ப்புப் பேரணிகளில் பங்கேற்குமாறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. நடப்பாண்டில் முதன்முறையாக இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால், புதிய கொள்கைக்கான மசோதாவில் இடம் பெற்றுள்ள ஓய்வு பெறுவதற்கான வயது மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலம் ஆகிய இரண்டும் மக்கள் விரோத அம்சங்களை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று அரசுத்தரப்பில் தெரி விக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு தொழிற் சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “மசோதாவை நடைமுறைப் படுத்தவே விரும்புவதாகப் பிரதமர் தெரி வித்தார். இது படுமோசமான முடிவாகும். ஒட்டு மொத்த மக்களால் இந்தப் புதிய கொள்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது. இது திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

“பயனற்றது”

“பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஒரு மணி நேரத்திலேயே, பேசுவதால் எந்தப் பயனும்  இல்லை என்று புரிந்து கொண்டோம். அதனால் நாங்கள் வெளியேறி விட்டோம். பேச்சுவார்த்தை யில் இருந்து நாங்கள் நேரடியாகத் தெருக்களில் போராடுவதற்கு அனுப்பப்பட்டோம்” என்று பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்றான சி.ஜி.டி.யின் தலைவர் சோஃபி பினெட் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் வரையில் நாம் போராட வேண்டி யுள்ளது. இதை நிறுத்த வேண்டும் என்று அரசு  புரிந்து கொள்ளும் வரையில் போராடுவோம். இந்தப் புதிய கொள்கை நிறுத்தப்படும் வரையில் அவர்களால் நிர்வாகம் செய்ய முடியாது” என்றார்.