world

img

பிரான்ஸ் : 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெருந்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 78 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பிரான்ஸில் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளது.

பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் பொது மக்கள் சமூக விலகலை கலைபிடிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கொரானா தொற்றுக்கு எதிராகப் பயன் தருகிறது என்று மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

;