நியூயார்க்,டிச.8- அமெரிக்காவின் 49 மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் வேலையின்மை பிரச்ச னைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.வேலையில்லாக் கால நிவாரணத்திற்காக விண்ணப்பித்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை டிசம்பர் 2 வரை 2,22,000 ஆக உயர்ந்துள்ளது.
பணிநீக்கம் ,புதிய பணிநியமனங்களை வெட்டுவது உள்ளிட்ட காரணங்களால் வேலை யின்மை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் மோசமான பொருளாதார சூழலை சரி செய்ய முயலாமல் முந்தைய காலத்தை விட பணி நீக்கங்கள் குறைவாகவே உள்ளன என்றும், வணிக நிறுவனங்கள் புதிய பணி நியமனங்க ளை குறைத்து விட்டன என்றும் அமெரிக்கா வில் விடப்படும் தேங்க்ஸ் கிவ்விங் விடுமுறை யால் இந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப் பட்டுள்ளது என்றும் நியாயப்படுத்துவதற்கான காரணங்களை அரசு தரப்புகள் தெரிவித்து வருகின்றன.
மேலும் தற்காலிக பணி நியமனமும் பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ளது.இந்த பணி முறையால் விடுமுறை நாட்களில் வேலை யின்மையால் ஏற்படும் அதே பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை தற்காலிக பணியா ளர்களும் சந்திக்கின்றனர் என கூறப்படுகிறது.
நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி திட்ட மிட்டு செயல்படுவதாகக் கூறினாலும் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் வேலை யின்மை பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.