world

img

கொரோனா தொற்று பரவலின் முக்கிய கட்டத்தில் உலகம்

கொரோனா தொற்று பரவலின் முக்கிய கட்டத்தில் உலகம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்துள்ளது.  இதைத்தொடர்ந்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான்கெர்கோவ் நாம் இப்போது தொற்றுநோயின் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றானது அதிவேகமாக அதிகரித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், பொது சுகாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட குழப்பம், அலட்சியம் போன்றவை கொரேனா உயரிழப்புகள் அதிகரிக்க காரணமாக உள்ளது. 
உலகம் முழுவதும் தற்போது வரை 13 கோடியே 73 லட்சத்து 40 ஆயிரத்து 198 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;