world

img

நியூசிலாந்து பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்பு

நியூசிலாந்து நாட்டின் 41-வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்று கொண்டார். 
கடந்த 2017ம் ஆண்டில் இருந்து நியூசிலாந்தின் பிரதமராக இருந்து வந்த ஜெசிந்தா ஆர்டன், தனது பதவியை ராஜினமா செய்யப் போவதாக கடந்த வியாழக்கிழமை திடீரென அறிவித்தார். ஜெசிந்தாவின் இந்த அறிவிப்பை அடுத்து ஆளும் தொழிலாளர் கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளராக கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நியூசிலாந்து நாட்டின் 41-வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று பதவியேற்று கொண்டார். 
 

;