world

img

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 கோடியை தாண்டியது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 கோடியை தாண்டியது. தற்போது 12,00,57,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,65,89,234 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும்  26 லட்சத்து 59 ஆயிரத்து 830- பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றுக்கு 2,08,08,448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
மேலும் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,808 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,037 பேர் உயிரிழந்துள்ளனர். 
பிரேசிலில் 70,934 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 1,940 பேர் உயிரிழந்துள்ளனர். உலகில் கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் 2 வது இடத்தில் உள்ளது. இதுவரை அங்கு 2,77,216 பேர் பலியாகியுள்ளனர்.

;