world

img

உலகளவில் அதிகரித்து வரும் குரங்கம்மை பாதிப்பு: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு  

12 நாடுகளில் 80க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கம்மை பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  

உலகில் கொரோனா தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட 12 நாடுகளில் தொடர்ந்து குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது சின்னம்மையை போன்ற அரிய தொற்றுநோய். ஆனால் சின்னம்மையைவிட அதன் தாக்கம் சற்று குறைவு.    

குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ், தோலின் மேற்புறத்தில் உள்ள உடைந்த உயிரிகள் மூலமாகவும், சுவாசக் குழாய் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது. மேலும் கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ள மியூகோஸ் திசுக்கள் மூலமாக பரவக்கூடும்.

குரங்கம்மைக்கு என்று தடுப்பூசி இல்லையென்றாலும் பெரியம்மை நோய் தடுப்பூசியே 85 சதவீத பலனளிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அபாயகரமான தொற்று என்றாலும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இருப்பினும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளது. 

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. 

;