world

ஜப்பானின் புதிய பிரதமராகிறார் புமியோ கிஷிடா

ஜப்பானின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா பதவியேற்க உள்ளார்.

ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்து வந்த ஷின்சோ அபே உடல்நிலைக்குறைவால் கடந்த ஆண்டு பதவி விலகிய நிலையில், யோஷிஹிதே சுகா புதிய பிரதமராக பதவியேற்றார். கடந்த செப்டம்பர் மாதம் பிரதமராகப் பதவி ஏற்ற யோஷிஹிதே சுகா ஓராண்டு பதவி வகித்த நிலையில், இவரது தலைமையிலான அரசு கொரோனா தொற்று பரலைக் கையாண்ட விதம் குறித்து ஜப்பான் மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது. இதனையடுத்து யோஷிஹிதே சுகா கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். 

ஜப்பானில் ஆளுங்கட்சியின் தலைவராக இருப்பவரே  பிரதமராகப் பொறுப்பேற்பார் என்பதால், ஆளுங்கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சிக்குள் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் கிஷிடா வெற்றி பெற்று கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 64  வயதான இவர் ஜப்பானின் அடுத்த பிரதமராக வரும் திங்கள்கிழமை பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

;