world

img

கடலுக்குப் பாய்ந்து செல்லும் ஆறுபோல் தடுக்கப்பட முடியாதது உலகமயமாக்கம்

பெய்ஜிங், ஜன. 18- சீன அரசுத் தலைவர் ஜி ஜின்பிங், உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் செயல்  தலைவருமான ஸ்வாப்பின் அழைப்பை ஏற்று, 17ஆம் நாள் பெய்ஜிங்கில் இருந்து 2022ஆம் ஆண்டிற்கான உலகப் பொருளா தார மன்றத்தின் காணொலி கூட்டத்தில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், 2 வாரங்களுக்குப் பின், புலி ஆண்டின் வசந்த விழா வர உள்ளது. சீனப் பண்பாட்டில் வீரம் மற்றும் சக்தியின் சின்னமாக புலி திகழ்கிறது. தற்போதைய கடு மையான அறைகூவல்களை எதிர்கொண்டு, நாங்கள் புலி போல் வீரமுடன் பல்வகை இன்னல்களைத் தோற்கடித்து, கோவிட்-19 நோய் பாதிப்பை முழுமையாக அகற்றி, பொருளாதாரச் சமூகத்தின் மீட்சி மற்றும் வளர்ச்சியை முன்னேற்றி, மனிதகுலத்துக்கு நம்பிக்கையைக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். தற்போதைய உலகம் முன்கண்டிராத மாற்றத்தை எதிர்நோக்குகிறது. பொரு ளாதாரத்தின் உலகமயமாக்கம், கால ஓட்ட மாகும்.

அது, கடலுக்குப் பாய்ந்து செல்லும்  ஆறு போல், தடுக்கப்பட முடியாது. உலகின் பல்வேறு நாடுகள் உண்மையான பலதரப்புவாதத்தைக் கடைப்பிடித்து, திறப்பு தன்மை வாய்ந்த உலகப் பொரு ளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், அமைதியான வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டு வெற்றி, நியாயமான பாதையாகும். வரலாற்றின் வளர்ச்சிப் போக்கிற்கு ஏற்ப, மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்க வேண்டும். ஒருதரப்புவாதம், பாதுகாப்பு வாதம், மேலாதிக்கவாதம் மற்றும் வல்லரசு அரசியலை எதிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சீனப் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. அதன் எதிர்கால வளர்ச்சி மீது  முழு நம்பிக்கை கொண்டுள்ளோம். பொது  செழுமையை சீனா நனவாக்க வேண்டும். ஆனால் சமத்துவ வாதத்துக்கு மாறாக, நியாயமான முறையில் நன்மைகளைப் பகிர்ந்து கொண்டு, வளர்ச்சியின் சாதனை யிலிருந்து பொது மக்கள் அனைவரும் பயனடையச் செய்ய வேண்டும். பொரு ளாதார முன்னேற்றத்தில், இயற்கைச் சூழல்  பாதுகாப்பையும் சீனா பின்பற்றி செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். தவிரவும், டாவோஸ், பனி விளையாட்டுக் கான சிறந்த இடமாகும். பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் துவங்க உள்ளன. எளிமையான, பாதுகாப்பான மற்றும்  சிறப்பான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி யை உலகிற்கு வழங்குவதில் சீனாவுக்கு நம்பிக்கை உண்டு என்றும் ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.

;