world

img

சந்திரனின் ரகசியம் சீனாவின் கையில்!

பெய்ஜிங், ஜுன் 30- நிலவின் தென் துருவத்தில் இருந்து பாறைகள் மற்றும் மண்ணைக் கொண்டு வந்த சாங்’இ (Chang’e) கொள்கலன் திறக்கப்பட்டது.

சீன விண்வெளி தொழில்நுட்ப அகாடமியின் (CAST) நிபுணர்களால் ஆய்வு கொள்கலனில் இருந்து மாதிரி பிரித்தெடுக்கப்பட்டது. பூமியில் இருந்து பார்க்க முடியாத நிலவின் தென் துருவ மான ஐட்கன் படுகையில் இருந்து மாதிரிகளை சேகரிப்பதே சாங்’இ யின் பணியாக இருந்தது.

சாங்இ சேகரித்த மாதிரிகள் 1935.3 கிராம் எடை யுள்ளவை என்றும் எதிர்பார்த்ததை விட அதிக மான மாதிரிகளை சேகரிக்க முடிந்ததாகவும் சீனா வின் தேசிய விண்வெளி நிறுவனம் (சிஎன்எஸ்ஏ) தெரிவித்துள்ளது.

பிரித்தெடுக்கப்பட்ட மாதிரிகள் பகுப்பாய்வுக் காக தனியாக உருவாக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சேகரிக்கப்பட்ட மாதிரி களை மேலும் ஆய்வு நடத்த சீன ஆராய்ச்சியா ளர்கள் தயாராகி வருகின்றனர். மாதிரிகளை ஆய்வு செய்ய மற்ற நாடுகளையும் சீனா அழைத்துள்ளது. ஆனால், அமெரிக்கா போன்ற சில நாடுகளுடன் ஒத்துழைப்பதில் கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் சீனா கூறியது.

முதல் நாடாக சீனா 

இந்த பணியின் மூலம், சந்திரனின் தொலை தூரத்தில் இருந்து பூமிக்கு மாதிரியை கொண்டு வந்த முதல் நாடாக சீனா உருவெடுத்துள்ளது. இந்த பகுதியில் சீனா மட்டுமே ஆய்வு செய்து வருகிறது. சீனாவின் தற்போதைய மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டான லாங் மார்ச் 5இல் உள்ள வென்சாங் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து மே 3 அன்று சாங்’இ 6 ஏவப்பட்டது, இது சந்திரனின் தொலைதூர தென்துருவத்தில் தரை இறக்கப் பட்டது, அங்கு ஆய்வுகளை மேற்கொண்டதுடன் பூமிக்குத் திரும்புவதற்கு முன்பு சந்திரப் பொ ருட்களின் மாதிரிகளைச் சேகரித்தது. 2030இல் நிலவின் மறுபக்கத்தில் மனிதனை தரையிறக்க சீனா முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
 

;