world

img

சீனா: பொறுப்பை நிறைவேற்றுங்கள்

ஐக்கிய நாடுகள் சபைக்குத் தர வேண்டிய நிதியை அமெரிக்கா தராமல் இருப்பது சரியானதல்ல என்று சீனா கண்டித்துள்ளது.

இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியான், "ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளுக்கு சுமார் 100 கோடி டாலர் அமெரிக்காவிடமிருந்து வர வேண்டியுள்ளது. அதோடு, சர்வதேச அளவிலான அமைதிப்படைகளின் செலவுக்கு சுமார் 140 கோடி டாலரையும் தராமல் இழுத்தடிக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனர்களில் ஒரு நாடான அமெரிக்கா தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்காதது சரியானது இல்லை. 1980களில் இருந்தே தனது பங்கை ஒழுங்காகச் செலுத்தாமல் அமெரிக்கா இருக்கிறது" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வளவு பெரிய தொகையைப் பாக்கி வைத்துக் கொண்டு எப்படி சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச சமூகத்தைக் கட்ட முடியும் என்ற கேள்வியையும் ஜாவோ லிஜியான் கேள்வி எழுப்பினார்.

;