world

img

கனடாவின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்ற அனிதா ஆனந்த்  

கனடாவின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் பதவி ஏற்றுள்ளார்.  

ஒட்டாவா -  கனடா நாடாளுமன்ற தேர்தலில் 338 இடங்களில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களையும், கன்சர்வேட்டிங் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்ற நிலையில் சிறு கட்சிகளின் ஆதரவோடு ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார்.  

இந்நிலையில் லிபரல் கட்சி சார்பில் ஒக்வில்லே தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் 46 சதவீதம் வாக்குகள் பெற்று கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றார். 54 வயதான அனிதா ஆனந்த் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை தமிழ்நாட்டையும், தாய் பஞ்சாபையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு கொரோனா தடூப்பூசிகளைப் பெறுவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.

;