world

img

ரீப்பர் வகை மிளகாயை சாப்பிட்டு கின்னஸ் சாதனை செய்த நபர்

உலகின் மிக காரமான மிளகாய் ரீப்பர் வகை மிளகாய். இது சாதாரண மிளகாய் காரத்தை விட சுமார் 1500 மடங்கு அதிக காரம் கொண்டது. இதை சாப்பிட்டால் மரணம் கூட ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த மிளகாயை கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் சாப்பிட்டு தன்னுடைய உலக சாதனையை தானே முறியடித்திருக்கிறார்.
கனடாவை சேர்ந்தவர் மைக் ஜாக் என்பவர் வெறும் 9.72 வினாடிகளில் 3 கருப்பு ரீப்பர் மிளகாயை சாப்பிட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்த ரீப்பர் மிளகாய் மிகவும் காரமாக இருப்பதால், ஒருமுறை சாப்பிட்டாலே அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த வகை மிளகாய் ஒருமுறை சாப்பிட்டலே தலைவலி, தொண்டை வறட்சி, வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டும். மூளையின் நரம்புகளை சுருக்கிவிடும். வாயில் எரிச்சல் கண்களில் தொடர்ந்து கண்ணீர், வயிற்று வலி, அதிக காய்ச்சல் ஏற்படுத்தும்
இந்நிலையில் கனடாவை சேர்ந்த மைக் ஜாக் மூன்று மிளகாயை 9.72 வினாடிகளில்  உட்கொண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
 

;