world

img

தீக்கதிர் உலக செய்திகள்

டிரம்ப் மிரட்டலுக்கு  கிளாடியா பதிலடி 

மெக்சிகோ, சீனா, கனடா உள்ளிட்ட நாடு களில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டியதற்கு மெக்சிகோ இடதுசாரி ஜனாதிபதி கிளாடி யா பதிலடி கொடுத்துள்ளார். டிரம்ப் பேசியது குறித்து அமெரிக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும், போதைப்பொருட்க ளால் அமெரிக்காவுக்குப் பிரச்சனை என்பதை எல் லாம் நம்ப முடியவில்லை. உண்மையில் அமெரிக்கா விலிருந்து கடத்தப்பட்ட ஆயுதங்களால் மெக்சிகோ தான் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

இந்தோனேசியா வெள்ளம்:  20 பேரின் உடல் மீட்பு 

இந்தோனேசியா சுமத்ரா தீவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் மண் மற்றும்  பாறை சரிவுகளில் சிக்கி பலர் பலியாகி யுள்ளனர். இதில் 20 பேரின் உடல்களை பேரிடர் மீட்புப்படை மீட்டுள்ளது. மேலும் இருவரது உடல் கண்டறியப்படவில்லை. அவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா என தெரியாத நிலையில் மீட்புப்படை தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. விவசாய நிலங்களும் பண்ணை களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன.

ஜப்பானில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை

2025 இல் ஜப்பான் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா வணிக நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளார். தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர் இதனை அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வுக்கு தொழிற்சங்கங்களுடன் அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்தும். ஆனால் பணவீக்க பிரச்சனைகளை கணக்கில் கொண்டு தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் 5 சதவீத உயர்வை அரசாங்கம் மறுத்துள்ளது.

5-9 வயதுள்ள குழந்தைகள் அதிகம் படுகொலை 

காசாவில் 10 வயதிற்குட்பட்ட 1,30,000 குழந்தைகள் 50 நாட்களுக்கு மேலாக மருந்துகள் இன்றியும், 10 நாட்களாக உணவு இன்றியும் தவிப்பதாக ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பு தெரிவித்துள்ளது. 5-9 வயதுள்ள குழந்தைகள் தான் அதிகம் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தின் மீதான இந்த போர் குழந்தைகள் மீதான போராகும் என அவ்வமைப்பின் பிராந்திய இயக்குனர் ஜெர்மி ஸ்டோனர் தெரிவித்துள்ளார்.

‘கனிம வளங்களுக்காகவே உக்ரைன் போர்’ 

உக்ரைன் போர் பணத்திற்காக நடை பெறுகிறது.ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய பணக்கார நாடுகள் எல்லாம் உக்ரை னில் உள்ள 21 நூற்றாண்டு தொழில் நுட்ப உலகிற்கு தேவையான மிக அரிதான கனிம வளங்களுக்காக காத்துக் கொண்டுள்ளன. உக்ரைன் எங்களுடன் மட்டுமே அந்த வணி கத்தை மேற்கொள்ள விரும்புகிறது. ரஷ்யாவு டன் அவர்கள் வணிகம் செய்யமாட்டார்கள் என அமெரிக்க செனட்டர் லிண்டஸி கிரகாம் பேசியுள்ளார்.