world

img

தீக்கதிர் உலக செய்திகள்

கென்யாவில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமாகிறது

ஏகாதிபத்திய நலன்களை மட்டுமே கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலில் கொண்டு வரப்பட்ட புதிய பொருளாதார மசோதாவிற்கு எதிராக கென்யமக்கள் மிகப்பெரும் போராட்டத்தை துவங்கினர். இந்த போராட்டத்தை தொடர்ந்து ஜனா திபதி வில்லியம் ரூட்டோ மசோதாவை  அமலுக்கு கொண்டு வரமாட்டோம் என உறுதியளித்துள்ளார்.எனினும் ஏகாதிபத்திய ஆதரவு ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அந்நாட்டு இளைஞர்கள் தலைநகரில் நடத்தி வரும் போராட்டம் ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது.

ஜனாதிபதி வேட்பாளரில் இருந்து  பைடன் விலக  வேண்டும் 

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின்  சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக உள்ள பைடன் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் எம்.பி.,கூறியுள் ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பு டன் நடந்த விவாத நிகழ்ச்சியில் பைடனின் மோச மான விவாதத்தை தொடர்ந்து அவருக்கு கடும் விமர்சங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் லாயிட் டோகெட்  என்ற ஜனநாயக கட்சி எம்பி தெரி வித்த கருத்து  அவரது கட்சிக்குள்ளாகவே எதிர்ப்பு கள் உருவாக துவங்கியுள்ளதை காட்டுகிறது.

கான் யூனிஸில் இருந்து  பாலஸ்தீனர்களை துரத்தும் இஸ்ரேல் 

காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் இருந்து பாலஸ்தீனர்களை இடப்பெயர இஸ்ரேல் மிரட்டி வருகிறது. இதனால் ஆயிரக்கணக் கான மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி வரு கின்றனர்.  இஸ்ரேலின் இந்த அடாவடித்தனத்தால் அப்பகுதியில்  உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம்  பாலஸ்தீ னர்கள் பாதிப்படைவார்கள் என தெரிய வந்துள்ளது. கான் யூனிஸ் இஸ்ரேல் ராணுவத்தால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் சில நாட்களுக்கு முன் அப்பகுதிக்கு மக்கள் மீண்டும் சென்ற நிலை யில் இடப்பெயர மிரட்டியுள்ளது இஸ்ரேல்.

ஷாங்காய் ஒத்துழைப்பு   உச்சிமாநாடு துவங்கியது

2024 ஆம் ஆண்டிற்கான ஷாங்காய் ஒத்துழைப்பு  உச்சிமாநாடு கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் இன்று ஜூலை 3 துவங்கி 4 வரை நடைபெற உள்ளது.   “நிலை யான அமைதி மற்றும் வளர்ச்சிக்கான  தேடல்”  என்ற முழக்கத்தின் கீழ் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கூட்டமைப்பின்  உறுப்பு நாடுகளின் தலைவர்கள்  பன்முக ஒத்துழைப்பை மேலும் அதிகப்படுத்தவும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா  போரை  தீவிரமாக்கும் நேட்டோ நாடுகள்

நேட்டோ  நாடுகள் உக்ரைன் - ரஷ்யா போரை தீவிரமாக்க முடிவு செய்துள்ளன. இதற்காக உக்ரைனுக்கு   அடுத்த ஆண்டு 4,305 கோடி டாலர்கள் அளவிற்கு  நிதியளிக்க ஒப்புக்கொண் டுள்ளன . இதனை  மேற்கு ஐரோப்பிய தூதர் உறுதி செய்துள்ளார். நேட்டோ பொதுச்செயலா ளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் உக்ரைனுக் கான ராணுவ உதவியை தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் அதற்கான நிதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உறுப்பு நாடு களை வலியுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

;