பனாமாவின் இறையாண்மைக்கு வெனிசுலா ஆதரவு
பனாமா கால்வாய் மீதான பனாமாவின் இறை யாண்மையை வெனிசுலா ஆதரிக்கிறது என வெனிசுலா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது. அமெரிக்க கப்பல்கள் பனாமா கால்வாயை கடக்கும் போது அதிக கட்டணம் வாங்கப்படுகிறது என அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொ னால்டு டிரம்ப் குற்றம் சாட்டினார். அதனைத்தொ டர்ந்து பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் எனவும் பேசியுள்ளார். இது பனா மாவின் இறையாண்மையை அவமதிக்கும் செயல் என கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இடைக்கால ஜனாதிபதிக்கு எதிராகவும் பதவி நீக்க தீர்மானம்
தென் கொரிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, இடைக்கால ஜனாதிபதியான ஹான் டக்-சூவுக்கு எதிராகவும் பதவி நீக்க தீர்மா னம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தென் கொரிய ஜனாதிபதியின் மனைவி விலை மதிப் புள்ள பரிசு வாங்கிய ஊழல் குற்றச்சாட்டு பதவி நீக்கத்திற்கு பிரதான காரணமாக முன் வைக்கப் பட்டுகிறது. எனினும் இந்த ஆட்சி மாற்றத்திற்கு பின் அமெரிக்காவின் தலையீடு உள்ளது என உலக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஜார்ஜ் மவ்ரிகோஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘நேதன்யாகுவை போலந்து கைது செய்யும்’
2025 ஜனவரி 27 அன்று ஆஷ்விட்ஸ் விடு தலையைக் குறிக்கும் முக்கிய நிகழ்வில் கலந்து கொள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வந்தால் அவரை கைது செய்வோம் என போலந்து அரசு அறி வித்துள்ளது. சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் மற்றும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது. போலந்தின் அறிவிப்புக்கு பிறகு அந்நிகழ்வை இஸ்ரேல் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆஷ்விட்னில் யூதர்க ளை நாஜிக்கள் படுகொலை செய்து வந்தனர். அந்த வதை முகாமில் இருந்து சோவியத் செம்படை அவர் களை மீட்டது குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் ஒன்பது புதிய உறுப்பினர்கள்
2025 ஜனவரி 2 முதல் பிரிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் மேலும் ஒன்பது புதிய நாடுகள் அதிகாரப்பூர்வ மான உறுப்பினர்களாக இணைய உள்ளன. கியூபா, உகாண்டா, மலேசியா, பெலாரஸ், பொலி வியா உள்ளிட்ட ஒன்பது நாடுகள் உறுப்பின ராக உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதியின் உதவியா ளர் யூரி உஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் ரஷ்யாவின் கசான் நகரில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்த புதிய உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் ஒரே ஆண்டில் நான்காவது பிரதமர்
பிரான்சில் புதிய அரசாங்கத்தை அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் பிரதமராக பிரான்கோய்ஸ் பேரூவை முன்மொழிந்துள்ளார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முந்தைய அரசு தோல்வி அடைந்ததை தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய அர சாங்கம் அமைக்கவில்லை என்றால் பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாமல் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும் என்ற சூழலில் புதிய பிரதமரை மக்ரோன் அறிவித்துள்ளார்.