கனடாவில் மருத்துவ நெருக்கடி
கனடா மருத்துவமனை களில் அவசர சிகிச்சை உட்பட அனைத்து துறைக ளும் நெருக்கடியை சந்தி த்து வருவதாக கனடா மருத் துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடி நாடு முழுவதும் பரவலாக உள்ளது என்றும் இதனால் நோயா ளிகள் மருத்துவ சேவைக்காக குறைந்த பட்சம் 20 மணி நேரம் முதல் சில நாட்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவையே இந்த நெருக்கடியின் அடிப்படை காரண மாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு வெனிசுலா எச்சரிக்கை
எங்கள் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதிக்கத் துவங்கினால் கடு மையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெ ரிக்காவிற்கு வெனிசுலா எச்சரிக்கை விடுத்துள்ளது. வெனிசுலா அமைதியாக வாழ வேண்டும். முன்னேற வேண்டும். வெனிசுலா மீதான அனைத்து ஒருதலைப் பட்சமான நடவடிக்கைகளையும் நீக்க வேண்டும். அமெ ரிக்கா வரும் நாட்களில் எடுக்க இருக்கும் முடிவுகளை நாங்கள் கவனமாக கண்காணித்து வருகிறோம் என வெனிசுலா ஜனாதிபதி மதுரோ தெரிவித்துள்ளார்.
கடற்கொள்ளையர்களிடமிருந்து மீனவர்கள் மீட்பு
அரபிக்கடலில் சோமா லிய கடற்கொள்ளையர்க ளால் மீன்பிடி படகுடன் கடத் தப்பட்ட இலங்கை மீனவர்க ளை சீஷெல்ஸ் கடலோர காவல்படை மீட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள் ளது. மேலும் கடத்தலில் ஈடுபட்ட கடற்கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட இலங்கை மீனவர்களும் மீன்பிடிக் கப்பலும், சீஷெல்ஸ் தலைநக ருக்கு கொண்டு செல்லப்பட்டதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.