world

img

கென்யாவில் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் 22க்கும் மேற்பட்டோர் பலி

நைரோபி,ஜூன்.25- கென்ய தலைநகர் நைரோபியில் ஜூன் 25 அன்று அந்நாட்டு மக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை  நடத்திய துப்பாக்கிச்   சூட்டில் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. கென்யாவில் மக்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் வகையில் அந்நாட்டு அரசு கொண்டு வந்த புதிய பொருளாதார மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்றும்  ஜனாதிபதி பதவி விலக வேண்டுமெனவும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கென்ய கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. 

இந்தியர்களுக்கு அறிவுரை

கென்யாவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வரும் சூழலில் தொடர்ந்து அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்படும்  சூழலை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் போராட்டங்கள் கட்டுக்குள் வரும் வரை தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறும் போராட்டங்கள் நடக்கும் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்  எனவும் வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.