6 ஜி தொழில் நுட்பத்தில் மேம்படும் சீனா
சீனாவின் தொலைத்தொடர்புத் துறை பொறியாளர்கள் குழு 6 ஜி இணைய சோதனையை வெற்றிகரமாக நடத்தி யுள்ளது. தனது விரைவான தொலைத்தொடர்புத் துறை வளர்ச்சியின் மூலம் சீனா விரைவில் 6-ஜி சேவைக்கு மாற உள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டு 6 - ஜி தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் முன்னோட்ட மாக 2025 ஆம் ஆண்டில் 6-ஜி தரத்தில் முழுமையான மேம்பாடு அடைய சீனா செயல்பட்டு வருகிறது.
வறுமையைப் போக்க வழி நடத்தும் பிரேசில்
நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் உலகளவில் உள்ள வறுமையைப் போக்க, வளர்ந்த நாடுகளை பிரேசில் வழி நடத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஜி-20 மாநாட்டிற்கு பிரேசில் தலைமை தாங்குகிறது. அந்நாட்டின் இடதுசாரி அரசின் ஜனாதிபதி லூலா, மாநாட்டிற்கு முன்பு நடைபெற உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் வறுமை ஒழிப்பு குறித்தான திட்டத்தை முன்வைக்கப் போவதாக கூறப்படுகிறது.
போரை நிறுத்து! யூதர்கள் போராட்டம்
ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்தவும் இனப்படு கொலைப் போரை தடுக்கவும் வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்ற அலுவலகத்திற்குள் உள் யூதர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். “இப்போதே போரை நிறுத்துங்கள்” “காசாவை வாழ விடுங்கள்” “யூதர்கள் பெயரில் பாலஸ்தீனர்களை கொலை செய்யாதீர்கள்” என பதாகைகள் ஏந்தியும் முழக்கமிட்டும் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தை அமைதிக்கான யூத குரல் என்ற அமைப்பு முன்னெடுத்துள்ளது.
கமலா ஹாரிஸுக்கு கட்சிக்குள் பெருகும் ஆதரவு
ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸுக்கு கட்சிக்குள் ஆதரவு பெருகி வருகிறது. மேலும் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட தேவையான அளவு கட்சி பிரதிநிதிகளின் ஆத ரவை அவர் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கட்சியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வாவதற்கு தேவையான 1,976 பிரதிநிதிகளின் வாக்கு களை கமலா பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.