world

img

சீனாவில் 4 கி.மீ. நீள ரயில் : பொருளாதார திட்டத்தில் புதிய மைல்கல்

பெய்ஜிங்,ஏப்.21-  சீனாவில் 324 பெட்டிகளுடன் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு சரக்கு ரயில் உருவாக்கப்பட்டு சோத னை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான வழிநடத்தும் சீன அரசு 10 ஆண்டுகளுக்கு, முன்  தனது நாட்டின் பொருளாதாரத்தை ஏழை,  எளிய நாடுகளுடன் இணைத்து வலுப்படுத்து வதற்காக ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதற்காக உள்நாட்டின்  ரயில் போக்குவரத்தை மேம்படுத்த  துவங்கியது. தற்போது உலகின் தலைசிறந்த ரயில் போக்குவரத்து கட்டமைப்பை கொண்ட நாடாக சீனா மாறியுள்ளது.

இந்நிலையில் பொருளாதாரத்தை  மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக அதிக சரக்குகளை ஒரே நேரத்தில் கையாளுவதற்காக 324 பெட்டிகளுடனும்  4 கி.மீ. நீளத்துடனும்  30 ஆயிரம் டன் சரக்குகளைக் கொண்டு செல்லும் வகையில் உலகிலேயே மிக நீளமான ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயிலை இயக்க 4 மின்சார இன்ஜின்கள்  பொருத்தப்பட்டுள்ளன.ஏப்ரல் 20 சனிக்கிழமை யன்று  சீனாவின் ஷுஜோ நகரம் முதல் ஹீவாங்குவா நகரம் வரை இந்த ரயில் மாதிரி ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.

;