உக்ரைனின் தெற்குப் பகுதியான ஒடசாவில் திங்கள்கிழமை இரவு வீசிய கடும் பனிப்புயலால் 5 பேர் பலியாகியுள் ளதாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அந் நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதிப் படுத்தியுள்ளார். பனிப் புயலில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து 17 மண்டலங்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக் கான வீடுகளில்மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் அவசர நிலை அமலில் உள்ளது.