ஹமாஸ் அமைப்பின் அரசியல் குழுத் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரானில் கொல்லப்பட்டார்.
ஈரானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் இஸ்மாயிலின் காவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதனை இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள வந்த ஹனியா, அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் வைத்து கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.