world

காசா மீது இஸ்ரேல் போர் சில முக்கிய கள நிகழ்வுகள்

uஅமெரிக்காவின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். ஐசன் ஹோவர் வளைகுடா கடல்பகுதிக்கு வந்தடைந்துள்ளது. இஸ்ரேலுக்கு எவ்வித தடையுமின்றி அனைத்துவித ஆயுதங்களையும் தரும் அனுமதியை ஜோ பைடன் அங்கீகரித்துள்ளார். இந்த இரண்டு நிகழ்வுகளும் இஸ்ரேலின் மிகப்பெரிய தாக்குதலுக்கு வழிவகுக்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது. 
u இஸ்ரேலின் பாலஸ்தீன படுகொலைகளுக்கு முற்றிலும் உதவியாக இருந்த அமெரிக்காவுக்கு காசா அல்லது பாலஸ்தீனத்தின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கும் உரிமை
இல்லை என ஈரான் ஜனதிபதி ரெய்சி காட்டமாக கூறியுள்ளார்.
u அரேபிய மற்றும் இஸ்லாமிய நாடுகள் பாலஸ்தீன பிரச்சனையில் ஒன்றுபட்ட முடிவை எடுக்க வேண்டும் என ஈரானும் துருக்கியும் கோரிக்கை வைத்துள்ளன. இது நடக்குமா என்பது வரும் நாட்களில் தெரியும்.
u காசா மீது இஸ்ரேல் 40,000 டன் குண்டுகளை பொழிந்துள்ளது. இது நாகசாகி/ ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டுகளின் விளைவுகளைவிட அதிகம் பாதிப்பு ஏற்படுத்தவல்லது. இதன் விளைவாக சுமார் 17 லட்சம் காசா மக்கள் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர்.
u ஒரு பக்கம் போர் நிறுத்தம் இருந்தாலும் இஸ்ரேல் படைகள்
மேற்கு கரை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பாலஸ்தீனர்களை சுட்டுக்கொன்றுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் 3200 பேரை கைது செய்துள்ளனர். 

- அ. அன்வர் உசேன்