2024 ஆம் ஆண்டின் முதல் 45 நாள் களில் இலங்கையின் சுற்றுலா வருவாய் ரூ.185 கோடிகளை எட்டியுள்ளது. நாளொன்றுக்கு 8 - 9 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வீதம் சுமார் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்றும் அதிகமாக இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலா வந்துள்ளனர் என்றும் அந்நாட்டு சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.