world

திவாலானது இலங்கை - உணவுப் பஞ்சம் தாக்கும் அபாயம்!

கொழும்பு, மே 21 - இலங்கை திவாலாகி விட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி அதி காரப்பூர்வமாக அறிவித்து விட்ட தால், பிற நாடுகளிடமோ, உலக நிதி அமைப்புகளிடமோ கடன் வாங்க முடியாத சிக்கலான நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இத னால், இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி யுள்ளது.  கொரோனா பெருந்தொற் றுக்குப் பிறகு இலங்கை பெரிய  அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. தோட்டப் பயிர்  கள் மற்றும் சுற்றுலா மூலமாக  இலங்கைக்கு கிடைத்துக் கொண்டி ருந்த அந்நியச் செலாவணியில் (அமெரிக்க டாலர்) கடும் சரிவு ஏற்  பட்டது. இதனிடையே, உக்ரைன் - ரஷ்ய யுத்தம் காரணமாக அதிகரித்த கச்சா எண்ணெய் விலை, குறைந்த பட்ச செலாவணி கையிருப்பையும் ஒரேயடியாக கரைத்தது. இதனால், இலங்கையின் நாணயம் அண்மை யில் பெரிய அளவில் மதிப்பிழந் தது.

இதனால், எரிபொருள் பற்றாக் குறை, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு என பெரும் பொருளாதார நெருக்கடி யில் இலங்கை சிக்கியது. ஆட்சி யாளர்களால் நிலைமையை சமா ளிக்க முடியாத நிலையில், அவர் களை பதவியிலிருந்து விலகச் சொல்லி மக்கள் போராட்டங்கள் வெடித்தன. வேறு வழியில்லாமல் பிரதமர் மகிந்த ராஜபச்சே பதவி விலகினார். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பிர தமர் ஆனார். எனினும், இலங்கை யின் பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. டாலர் கையிருப்பு இல்லாத தால் அன்றாடம் பொருட்களை வாங்க கடன் வாங்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உட்பட அத்தியா வசியப் பொருட்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியாவிடம் கடன் வாங்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கைக்கு ஜனவரி முதல் 400 மில்லியன் அமெ ரிக்க டாலர் நாணய பரிமாற்றம் மற்  றும் 500 மில்லியன் அமெரிக்க டால ரில் கடன் வழங்கியுள்ளது. மேலும்  2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் உதவி வழங்கவும் உறுதி யளித்துள்ளது.  கடந்த மாதம், உணவு, மருந்து கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க இந்தியா வுடன் 1 பில்லியன் அமெரிக்க டாலர்  கடனாக பெற இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது.

மறுபுறத்தில் ஏற்கெனவே வாங்  கிய கடனுக்கான வட்டித் தொகை யை செலுத்த முடியாத நிலையும் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. ஜூலையில் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டாலர் சர்வதேச தங்கப் பத்திர கடனில் இலங்கை உள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியில் 14.3 சத விகித பங்குடன் அதிக கடன் பெற்ற  நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவிடம் அதிகமாக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.  ஒப்பந்தப்படி இந்தியாவிற்கே ஜூலை மாதத்துக்குள் இலங்கை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை பெரிய அளவில் உள்ளது. சீனாவிடம் பெற்ற  கடன் மற்றும் வட்டியிலும் ஒருபகுதி யை ஜூலையில் செலுத்த வேண் டும்.

இந்த நிலையில் கடந்த 70 ஆண்டு களில் இல்லாத அளவு மிக மோச மான நிதி நெருக்கடியில் சிக்கித்  தவிக்கும் இலங்கை முதன்முறை யாக 606 கோடி ரூபாய் கடன் தவ ணையை கட்டத் தவறி உள்ளது.  கடன் தொகையை செலுத்து வதற்கான ஒருமாத சலுகைக் கால மும் முடிந்து விட்டதால் பொருளா தார ரீதியாக இலங்கை திவாலாகி விட்டது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்த லால் வீரசிங்கே வியாழனன்று திவால் அறிவிப்பை வெளியிட்டார். “இலங்கையில் இந்தாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகி தமானது மிகவும் மந்தகரமான நிலை யிலேயே காணப்படும். தற்போது 30 சதவிகிதமாகக் காணப்படுகின்ற பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்க ளில் 40 சதவிகிதமாக அதிகரிக்கும். கடனை மறுசீரமைக்கும் வரை இலங்கை வாங்கிய கடனை திருப் பிச் செலுத்த முடியாது. இதனை கடன் வாங்கியவர்களிடம் ஏற்கெ னவே தெரிவித்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடனும் பேச்சு நடத்தி வருகிறோம். கடனளித்தவர்களிடம் கடன் மறுசீரமைப்பு செய்யுமாறு பேசி வருகிறோம். இலங்கையின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பது 3 பில்லியன் டாலராக உள்  ளது. நெருக்கடியில் இருந்து வெளி யேற இந்த ஆண்டு 3 பில்லியன் முதல் 4 பில்லியன் டாலர்கள் வரை  தேவை” என்று நந்தலால் வீரசிங்கே குறிப்பிட்டார். இதன்மூலம், ஆசிய - பசிபிக்  பிராந்தியத்தில், இந்த நூற்றாண் டில் திவாலான முதல் நாடு பெயரை இலங்கை பெற்றது.

நெருக்கடியால் பாதிக்கப் பட்டுள்ள இலங்கை ஒட்டுமொத்த மாக வெளிநாடுகள், வங்கிகள், சர்வ தேச நிதியம் உள்ளிட்டவற்றில் மொத்  தமாக உள்ள 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனை தற்போதைய நிலையில் திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. வெளிநாடு களில் இருந்து அரிசி, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்கியதற்கு செலுத்த  வேண்டிய நிலுவைத் தொகை ஜன வரி மாதத்திலிருந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவரை எந்த  பணத்தையும் திருப்பிச் செலுத்த  முடியாத நிலையில் பொருட்கள் வாங்கிய வகையில் செலுத்த வேண் டிய தொகை மட்டும் 12.6 பில்லியன் டாலராக உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.  இலங்கை மத்திய வங்கி திவால் நிலையை அறிவித்ததால், முத லீட்டாளர்கள் மத்தியில் இலங்கை தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியுள்ளது. அதற்கு  இனிமேல் சர்வதேச கடன் சந்தையில் பெரிய அளவிற்கு கடன் எதுவும் கிடைக்காது என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.  டாலரும் கையிருப்பில் இல்லாததால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை அந்த  நாட்டினால் கடனுக்கு கூட பெற முடியாது. எரிபொருட்கள் வாங்குவதற்கு அந்நிய செலாவணி இல்லாததால், மக்கள் யாரும் எரிபொருள் நிலையங்களில் பெட்ரோ லுக்காக நிற்க வேண்டாம் என இலங்கை அரசு அந்நாட்டு மக்களிடம் கூறியுள்ளது. “நமது கடற்பரப்பில் ஒரு பெட்ரோல் கப்பல் உள்ளது. ஆனால் நம்மிடம் அந்நிய செலா வணி இல்லை” என இலங்கை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வேதனை தெரிவித்துள் ளார்.

இலங்கையில் தற்போதே உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஆரம்பித்து விட்டது. இது வருங்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக மாறும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. விரைவிலேயே பெரிய அளவிற்கு உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆண்டில் உணவில்லாமல் பஞ்சத்தில் அடிபடும் நாடுகளில் ஒன்றாக  இலங்கை இருக்கும் என்று கூறியுள்ள அவர், பஞ்சத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள இலங்கை மக்கள் சிறு தானியங்களை உடனே பயிரிட வேண்டும் என்றும் இலங்கை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்  பாடு அதிகரித்துள்ளதால், பொதுத் துறை  ஊழியர்கள் பணிக்கு வருவதை தவிர்க்கு மாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

;