world

img

நாட்டு நலக் கொள்கைகளால் வியட்நாம் அபாரம்

ஹனோய், நவ.30- நடப்பாண்டில் கடந்த 11 மாதங்களில் 1,060 கோடி டாலர் மதிப்பிலான வர்த்தக  உபரியை வியட்நாம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கொரோனா பெருந்தொற்று, உக்ரைன்-ரஷ்யா போர், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உலக அளவிலான விலையுயர்வு ஆகிய பிரச்சனை களால் பெரும்பாலான நாடுகள் நெருக்க டியில் சிக்கித் தவித்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நல்ல நிலையில் பொருளாதாரத்தை வைத்திருந்த பல ஐரோப்பிய நாடுகளே தற்போது திணறுகின்றன. அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள்  பெரும் கொந்தளிப்புடன் போராட்டங் களை நடத்தி வருகின்றனர். பல்வேறு துறைகளில் வேலை நிறுத்தங்கள் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. கடந்த பத்தாண்டுகளில் பல நாடு களுடனான வர்த்தக உறவை வியட்நாம் மேம்படுத்திக் கொண்டுள்ளது. புதிய, புதிய உடன்பாடுகள் கையெழுத்தாகின. ஏற்றுமதியைக் மையமாகக் கொண்ட புதிய கொள்கை உருவாக்கப்பட்டது. பெரும்பாலான நாடுகளுடன் வர்த்த கத்தில் உபரியையே வியட்நாம் கொண் டுள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை என்பது  அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு  நாடுகளுடன் இருக்கிறது. அதே வேளை யில், உலகிலேயே வியட்நாமில் இருந்து அதிகமாக பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது.

வியட்நாமுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாக மக்கள் சீனம் இருக் கிறது. 10 ஆயிரத்து 990 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை சீனாவில் இருந்து வியட்நாம் இறக்குமதி செய்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடு களுடன்தான் வர்த்தக உபரியை வியட்நாம் வைத்திருக்கிறது. இந்த நிலை யை மேலும் அதிகரிக்க டிசம்பர் மாத த்தில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாக வியட்நாமின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் துணை அமைச்சர் டோ தாங் ஹாய் அறிவித்துள்ளார். வரிச்சலுகைகள், தொழில்நுட்ப மேம்பாடு, கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூடுதல் சலுகை கள் உள்ளிட்டவை மீது கவனம் செலுத்தப் போவதாக டோ தாங் ஹாய் உறுதியளித்திருக்கிறார். வர்த்தக நிறுவனங்களுக்கு என்னென்ன வசதி கள் தேவைப்படுகின்றனவோ அவற்றை  செய்து தரப்போகிறார்கள். விவசாயத் துறையில் தாராள வர்த்தக உடன்பாடு கள் சில நாடுகளுடன் போடப்பட்டுள் ளன. இவற்றை வியட்நாம் விவசாயி கள் மற்றும் உணவுப் பொருள் நிறு வனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

உலகிலேயே அதிகமாக அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் உள்ள பல்வேறு முன்னணி அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டிய லில் வியட்நாமும் உள்ளது. தனது அரிசி ஏற்றுமதியில் பாதியை பிற  ஆசிய நாடுகளுக்குதான் வியட்நாம் ஏற்றுமதி செய்கிறது. அதற்கு அடுத்த படியாக ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க நாடுகள் இடம் பிடித்துள்ளன. 

சுற்றுலாத்துறை அமோகம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் சிக்கல்களை சந்தித்து வந்த  சுற்றுலாத்துறை தற்போது மீண்டெழுந் துள்ளது. கடந்த 11 மாதங்களில் 29  லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் வெளி நாடுகளில் இருந்து வியட்நாமுக்கு வந்துள்ளனர். நவம்பர் மாதத்தில் மட்டும் 5 லட்சத்து 97 ஆயிரம் பேர் வந்திருக் கிறார்கள். வியட்நாமின் பொதுப் புவியியல் அலுவலகத்தின் தகவல்படி, கடந்த 10 மாதங்களில் வியட்நாம் தலைநகர் ஹனோயைப் பார்க்க பத்து லட்சம் பயணிகள் வந்திருக்கிறார்கள். ஹனோயைப் பார்க்க 10 லட்சம் முதல் 12 லட்சம் வரையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது என்ற இலக்கு  நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கு எட்டப்பட்டு விடும் என்று சுற்றுலாத்துறை நம்பிக்கை தெரி வித்துள்ளது.
 

;