world

img

எங்கள் செல்வத்தைக் கொள்ளையடிக்காதே!

காரகஸ், ஆக.11- வெளிநாடுகளில் வைக்கப்பட்டு ள்ள வெனிசுலாவின் செல்வத்தை சட்டவிரோதமாகக் கைப்பற்றிக் கொள்ள நடக்கும் முயற்சிகளுக்கு வெனிசுலாவின் ஜனாதிபதி நிகோ லஸ் மதுரோ கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். வெனிசுலா மத்திய வங்கிக்குச் சொந்தமான தங்கம். இங்கி லாந்தில் உள்ள வங்கிகளில் வைக்கப் பட்டுள்ளது. வெனிசுலாவின் அரசு  பெட்ரோலிய நிறுவனமான சிட்கோ  பெட்ரோலியக் கழகத்திற்குச் சொந்தமான இந்த தங்க இருப்பை திரும்ப எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்கு பிரிட்டன் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.  

பொய்யான வழக்குகளைப் போட்டு வெனிசுலாவுக்குரிய தங்கத்தை திரும்பத் தராமல் இருப்ப தற்கான வேலைகளைச் செய்து  வருகிறார்கள். இந்த நடவடிக்கை க்கு வெனிசுலா கடும் கண்ட னத்தைத் தெரிவித்துள்ளதோடு, சர்வதேச அளவிலான ஆதரவைத் திரட்டப் போவதாகவும் அறிவித்துள் ளது. வெனிசுலாவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்ட ங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்துப் பேசிய வெனி சுலா ஜனாதிபதி நிகோலஸ் மது ரோ, “வெனிசுலா மீதான இது போன்ற தாக்குதல்களை இனி மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. லண்டனில் உள்ள தங்கம் உள்ளிட்டு வெளிநாடுகளில் உள்ள வெனிசுலாவின் அனைத்துச் சொத்துக்களையும்  மீட்போம். அதே போன்று, கடத்தப்பட்டு அர்ஜெ ண்டினாவில் நிறுத்தப்பட்டுள்ள சரக்கு விமானத்தையும் வெனிசுலா வுக்குக் கொண்டு வருவோம்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க சதி

உருகுவே நாடு வழியாக சென்று கொண்டிருந்த வெனிசுலா வின் சரக்கு விமானம் ஒன்று பறப்ப தற்குத் தரப்பட்டிருந்த அனுமதி யை திடீரென்று ரத்துசெய்தார் கள். விமானம் பறந்து கொண்டிருந்த போது அனுமதி ரத்தானதால் அவ சர, அவசரமாக அர்ஜெண்டினாவில் அந்த விமானம் தரையிறங்கியது. சர்வதேச ரீதியான வழக்கு என்று சொல்லி, அந்த விமானத்தை வெனி சுலாவுக்கு அனுப்ப விடாமல் தடுக் கிறார்கள். இத்தனைக்கும் அந்த விமானத்தில் சட்டவிரோதமாகவோ அல்லது சந்தேகத்துக்கு உரிய தாகவோ எதுவும் இல்லை என்று அர்ஜெண்டினா விமான நிலைய நிர்வாகம் தெளிவுபடுத்திவிட்டது. ஆனால், புளோரிடா நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைப் போட்டு, விமானத்தையோ அல்லது அதில் உள்ள சரக்குகளையோ வெனிசுலாவுக்கு போக விட வில்லை. இதன் பின்னணியில் அமெரிக்காவின் சதிவேலை இருப்பதாகக் கூறப்படுகிறது.  ஏகாதிபத்திய நீதிமன்றம் வழி யாக எங்கள் விமானத்தைக் கொள்ளையடிக்க முயல்கிறார்கள். இந்த சரக்கு விமானம் வெனி சுலாவில் மனிதாபிமான ரீதியான சேவையைச் செய்து கொண்டிருந் தது என்று நிகோலஸ் மதுரோ தெரி வித்துள்ளார்.
 

;