world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பெட்ரோ டாலர்  உடன்பாடு முடிந்தது

அமெரிக்காவுடன் சவூதி அரேபியா ஏற்ப டுத்தியிருந்த பெட்ரோ டாலர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. 2024 ஜூன் 9 அன்று 50 ஆண்டுகால ஒப்பந்தம் காலாவதியான நிலையில் ஒப்பந்தத்தை சவூதி அரேபியா புதுப்பிக்க வில்லை. அதற்கு மாறாக தங்கள் எண்ணெய்யை சீனாவின் யுவான், யென் உள்ளிட்ட பல நாணயங்க ளில் விற்பனை செய்யும் என தெரிவிக்கப்படுகி றது. அமெ. டாலரை உலகின் இருப்பு நாணயமாக தக்கவைத்துக்கொள்ள பெட்ரோ-டாலர் ஒப்பந்தமே வலுவான அடித்தளமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் மீதான தாக்குதலை  தீவிரப்படுத்தும் அர்ஜெண்டினா அரசு 

அர்ஜெண்டினாவின் தீவிர வலதுசாரி அர சின் ஜனாதிபதி ஜேவியர் மிலே கொண்டு வர உள்ள  கார்ப்பரேட் நல தனியார்மயப் பொரு ளாதார சீர்திருத்தங்களை எதிர்த்து  அர்ஜென் டினா மக்கள் போராடி வருகின்றனர். கடுமை யான வன்முறை, அடக்குமுறைகளையும் தாண்டி போராடி வரும் மக்கள் மீது அந்நாட்டு காவல் துறை தாக்குதல்களை தீவிரப்படுத்தி யுள்ளது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்; பலர் காயம டைந்துள்ளனர்.

‘50 சதவீத பாலஸ்தீனர்கள்  பட்டினியால் பலியாகும் அபாயம்’

காசாவில் இஸ்ரேலால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைப் பஞ்சத்தால் அங்குள்ள மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் பலியாகக்  கூடும் என ஐ.நா மனிதாபிமான அவை எச்சரித்துள்ளது. சூடான் மற்றும் காசாவில் போர் கட்டுப்பாட்டை மீறி நடக்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஐ.நா மனிதாபிமான விவகார  துணைச் செயலாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா  போர் தீவிரமடைகிறது

இஸ்ரேல் - லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையிலான போர் தீவிரம டைகிறது. செவ்வாய் கிழமையன்று இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது  தாக்குதல் நடத்தி  அவ்வமைப்பின் முக்கிய கமாண்டர் ஒருவரை கொலை செய்தது. இதனை தொடர்ந்து ஹிஸ் புல்லா 200 க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. குறிப்பாக இஸ்ரேலின் எல்லைக்குள் 20 கி.மீ வரை ஹிஸ்புல்லா ஏவு கணை தாக்குதல் நடத்தியுள்ளது. 

இலங்கைக்கு ஐஎம்எப்  இடைக்கால கடன்

இலங்கைக்கு இடைக்கால கடன் திட்டம் மூலம் 33 கோடியே 60 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்க ஐஎம்எப் தலை மையகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இது வரை இலங்கை மொத்தமாக 100 கோடி டாலர் கடன் வாங்கியுள்ளது குறிப் பிடத்தக்கது.