world

img

ராணுவக் கலக முயற்சியை முறியடித்தது பொலிவியா அரசு

வெள்ளியன்று அதிகாலை தலைநகர் லா பாஸ் மட்டுமல்ல, பொலிவியா நாடே பெரும் அதிர்ச்சி அடைந்தது. பொலி வியா மட்டுமின்றி லத்தீன் அமெரிக்க நாடுகளும், செய்தி பரவத் துவங்கியவுடன் உலகநாடுகளும் அதிர்ச்சி அடைந்தன.  பொலிவியா ராணுவ தளபதி யான ஜெனரல் ஜூவான் ஜோஸ்  ஜுனிகா தலைமையில் ராணுவத்தி னர் திடீரென்று பொலிவியா தலை நகரில் உள்ள மையப்பகுதியை கைப்பற்றினர். அத்துடன் ஜனாதிபதி  மாளிகைக்குள்ளும் சில ராணுவத்தி னர் ஆயுதங்களுடன் நுழைந்து கைப்பற்ற முயன்றனர். தகவலறிந்து ஊடகங்களும் மக்களும் லா பாஸ் நகரின் மையப்பகுதியில் கூடிய போது, அவர்களிடையே தோன்றிய ராணுவத் தளபதி, கலகம் செய்து பொலிவியாவின் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாக அறிவிக்கத் தொடங்கினார். ஆனால் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே பொலிவியா ராணுவத்தின் மற் றொரு பகுதியினர் விரைந்து வந்து, கலகத்தில் ஈடுபட்ட தளபதியையும் அவருடன் இணைந்து செயல்பட்ட முன்னாள் கப்பல்படை துணைத் தளபதி ஜூவான் அர்னேஷ் உள்பட 17 பேரை கைது செய்து, ராணுவக் கலகத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்தனர். பொலிவியாவில் இடதுசாரி ஜனாதிபதியான லூயிஸ் ஆர்ஸ் ஆட்சி நடத்தி வருகிறார். இவர் முந் தைய இடதுசாரி ஜனாதிபதியான ஈவோ மொரேல்ஸை தொடர்ந்து,  அவரது வழியில் அமெரிக்க ஏகாதி பத்தியத்திற்கு பணிய மறுத்து மக்கள் நலத்திட்டங்களை உறுதியோடு செயல்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லத்தீன் அமெரிக்க கண்டத்தில் பொலிவியா உள்ளிட்ட இடதுசாரி அரசுகளை குறி வைத்து அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து காய்  நகர்த்தி வருகிறது. அதன் ஒரு பகு தியே பொலிவியாவில் நடந்துள்ள ராணுவக் கலக முயற்சி. எனினும் உடனடியாக அந்தக் கலகத்தை முறியடித்துள்ளது பொலிவியா இடதுசாரி அரசு.

;