world

கல்வித் துறையில் சீன-இந்திய ஒத்துழைப்பு

பெய்ஜிங், டிச.7- 2021ஆம் ஆண்டு சீனாவைப் புரிந்து கொள்வது என்ற சர்வதேச மாநாடு டிசம்பர் 1 முதல் 4 வரை குவாங்சோ நகரில் நடைபெற்றது. பின்னர் சீனத் தேசிய புதுமை மற்றும் வளர்ச்சி நெடுநோக்கு கழ கத்தைச் சேர்ந்த கல்வி ஆய்வு  மைய இயக்குநர் லீயூ ஜியான், சீன ஊடகக் குழுமச் செய்தியாளர்க ளுக்குப் பேட்டி அளித்தார். சீனக் கல்வி துறை வளர்ச்சியில் இந்திய இணையப் பயனர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இத்துறையில் இரு நாட்டு ஒத்துழை ப்பு பற்றி அவர் கூறுகையில், இந்தி யக் கல்வி துறைக்குத் தனிச்சிறப்பு டைய மேம்பாடுகள் உள்ளன. இந்தி யாவின் உயர் நிலை கல்வி செயற்கை நுண்ணறிவுக்கும், நவீன நிர்வாக அறிவுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவை சீனக் கல்வி துறை கற்றுக் கொள்ளத்தக்கவை. சீனப் பொது மக்கள் அடிப்படை கல்வி வாய்ப்பு களைச் சமத்துவ முறையில் பெற முடியும். அதனால், இரு நாடுகள் ஒன்றுக்கொன்று கற்றுக்கொண்டு, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், இரு நாடுகள் பரிமாற் றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப் படுத்தி, உலகளவில் கல்வி மேலாண்மையில் ஆக்கமுடன் கலந்து கொண்டு, உலகக் கல்விக் கான சீர்திருத்தத்தைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்று அவர்  தெரிவித்தார்.

இந்திய மாணவர்களை வரவேற்கும் சீனா

இம்மாநாட்டில் கலந்துகொண்ட, ஆய்வு மையத்தின் செயல் இயக்கு நர் வாங் யிஹுங் அம்மையார் கூறு கையில், சீர்திருத்தம் மற்றும் வெளி நாட்டு திறப்பு பணி மேற்கொண்ட பிறகு சீனா சீராக வளர்ந்து வரு கின்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சியும்  சீன பொது மக்களும் உலக மக்க ளுடன் தொடர்பை வலுப்படுத்த விரும்புகின்றனர் என்றார். சீனாவும் இந்தியாவும் நட்பார்ந்த அண்டை நாடுகளாகும். ஒவ்வோராண்டும் நிறைய இந்திய மாணவர்கள் சீனாவில் கல்வி பயில்கின்றனர். அவர்கள் சீன பண்பாட்டையும் அமைப்பு முறை யையும் அறிந்து கொண்டு, சீனாவை பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

;