world

img

ஷாங்காய் கூட்டமைப்பின் புதிய உறுப்பினரானது பெலாரஸ்

அஸ்தானா, ஜூலை 5- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ)24 ஆவது உச்சி மாநாடு கஜகஸ்தானின் தலைநகர் அஸ்தானாவில் நடந்து முடிந்துள்ளது. நாடுகளின் பாது காப்பு மற்றும் உறுதித்தன்மை, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான விவாதங்கள் நடத்தப்பட்டன. கஜகஸ்தான் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகாயேவ் தலைமையில் நடை பெற்ற இம்மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புடின், ஈரான் தற்காலிக ஜனாதிபதி முகமது மொக்பர் உள்ளிட்ட தலைவர்களும் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு  2001  ஜூன் 15 அன்று கஜகஸ்தான், சீனா,  கிர்கிஸ் குடியரசு, ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகளால்  ஷாங்காயில் உருவாக்கப்பட்டது. உஸ் பெகிஸ்தான்  தவிர மீதம் உள்ள 5 நாடுகள் 1996 ஆம் ஆண்டு பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகப் படுத்த உருவாக்கிய ஷாங்காய் 5 கூட்ட மைப்பில் இருந்து இவ்வமைப்பு உருவாகி யுள்ளது. இக் கூட்டமைப்பில் தற்போது இந்தியா, ஈரான், பாகிஸ்தான் உட்பட ஒன்பது நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நாடுகள் உலக மக்கள்தொகையில் 40 சதவீதத்தை  பிரதிநிதித்துவப்படுத்து வதுடன் உலகளா விய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 23,00,000 கோடி டாலர்களை கொண்டுள் ளன. ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய மூன்று பார்வையாளர் நாடுகளும் அஜர்பைஜான், அர்மீனியா, கத் தார், அரபு அமீரகம், சவூதி, துருக்கி உட்பட 14 உரையாடல் நாடுகளும் உள்ளன. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் பெலாரஸை உறுப்பு நாடாக  இணைக்கும் பணி துவங்கிய நிலையில் தற்போதைய மாநாட்டில் அது உறுப்பின ராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.    இஸ்ரேல் - பாலஸ்தீனம், உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும்  சூழலில் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் (ஹிஸ்புல்லா ) இடையே போர்ச்சூழல் அதி கரித்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட 20 முக்கிய ஆவணங்கள்  உச்சி மாநாட்டில் பரிசீலிக்கப்பட்டுள்ளன.  கஜகஸ்தான் மாநாட்டு பிரகடனம், உலக ஒற்றுமைக்கான முன்முயற்சி, 2035 வரையிலான கூட்டமைப்பின் வளர்ச்சித் திட்டம், 2030 வரையிலான எரிசக்தி ஒத்து ழைப்பு மேம்பாட்டு திட்டம், 2025-2027க்கான  பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகிய வற்றை எதிர்கொள்ள ஒத்துழைப்புத் திட்டம்,  2025-2027க்கான  போதைப்பொருள்  எதிர்ப்பு  கொள்கை ஆகியவையும் இந்த விவாதத்தில் அடங்கியுள்ளது.  மாநாட்டின் தலைவர் ஜனாதிபதி காசிம்  வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை யின்படி, பாதுகாப்பு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பொது அணுகுமுறைகள், உறுப்பு நாடுகளுக்கு இடையே பொருளா தார ஒத்துழைப்பு ஆகியவை இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் மைய விவாதமாக இருந்தது.  இந்த கூட்டமைப்பின் பலம் மிக்க நாடு களான ரஷ்யா, சீனா ஆகியவை பொருளா தாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன. உறுப்பு நாடுகளிடையே சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு பொருளாதார திட்டத் திற்கான ஒத்துழைப்பை மேம்படுத்து வதற்கும், வர்த்தகத் தடைகளைக் குறைத்து ஒழுங்குமுறைகளை வகுப்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என மாநாடு துவங்கு வதற்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய கிழக்கு நாடுகளிடையே தனது பொருளாதார ஒத்துழைப்பையும்  நட்பையும்  அதிகரிக்க சீனா, வலுவான மேடையாக இந்த கூட்டமைப்பை பயன்படுத்தி வரு கிறது. இந்த கூட்டமைப்பில் உள்ள  இந்தி யாவைத் தவிர அனைத்து உறுப்பு நாடு களும் பத்தாண்டுகளுக்கும் மேல்  சீனா வின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் பொருளாதார பரிவர்த்தனை  மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார்.  இந்த 24ஆவது உச்சிமாநாடு முடிந்த பிறகு கூட்டமைப்பின் தலைவர் பதவி சுழற்சி முறையில் சீனாவிற்கு செல்லும்.