குழந்தைகளைப் பாதுகாத்தோம்: கியூபா பெருமிதம்
ஹவானா, ஜூலை 28- கொரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகளைச் செலுத்திய பிறகு, கியூபாவில் ஒரு குழந்தை கூட தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழக்க வில்லை என்று கியூபா அரசு தெரி வித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றிற்கு உலக நாடுகள் பாதிக்கப்பட்டது போன்றே கியூபா வும் நெருக்கடிக்கு ஆளானது. குழந்தை களையும் தொற்று பாதித்தது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 18 வயதுக்குட்பட்ட வர்களுக்கு அதை செலுத்துவதற்கு முன்பு 2 வயது முதல் 18 வயது வரையிலான வர்களில் 18 பேர் உயிரிழந்தனர். தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பிறகு இந்தக் கொடிய நோயால் எந்தக் குழந்தையும் உயிரிழக்க வில்லை.
கியூப தடுப்பூசிகளுக்கு காரணம் எதுவும் சொல்லாமல் அங்கீகாரம் வழங்க உலக சுகாதாரக் கழகம் மறுத்து வரு கிறது. ஆனால், பின்லே தடுப்பூசி மையம் உருவாக்கிய கியூபாவின் சொந்தத் தயாரிப்பான சோபெரனா தடுப்பு மருந்துதான் இந்தக் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் இல்லாதது, அந்தத் தடுப்பூசி நல்ல பலனைத் தந்திருப்பதையே காட்டுகிறது என்று கியூபாவின் மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கியூபாவில் ஒமைக்ரான் தொற்று அலை வீசியபோது, இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு 90.1 விழுக்காடு பாதுகாப்பைத் தருகிறது என்று தொடக்க கட்ட ஆய்வுகளில் தெரிய வந்தது. ஆனால் தற்போது, அந்தத் தடுப்பூசிகள் முழுமையான பாதுகாப்பைத் தந்துள்ளன என்று இது குறித்த ஆய்வை மேற்கொண்ட பெட்ரோ கோரி மையம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி கள் செலுத்தியபிறகும், தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர் பாதுகாக்கப்பட்ட தோடு, மற்ற குழந்தைகளுக்கு பெரும் அள வில் தொற்று பரவாதவாறும் பார்த்துக் கொள்ளப்பட்டது. தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு மற்றும் 2 வயது முதல் 18 வயது வரையிலான வர்களுக்கு அதைச் செலுத்தியதோடு, பள்ளி களைத் திறக்கவும் கியூபாவின் ஜனாதி பதி மிகுவோல் டியாஸ் கானெல் உத்தர விட்டார். இதனால், வழக்கமான கற்பித்தல் மற்றும் கற்றுக் கொள்ளுதல் நடப்பதற்கான வாய்ப்பு உருவானது. தடுப்பூசியால்தான் இது சாத்தியமானது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஆய்வு விபரங்களை கியூபாவின் சுகா தாரத்துறை கியூபாவின் அரசியல் தலை வர்களுக்கு விளக்கும் கூட்டமும் நடந்துள் ளது. வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்க ப்பட்டுள்ள இந்த சோபெரனா தடுப்பூசி மருந்தின் தொழில்நுட்பத்தை ஈரானின் பாஸ்டியர் மையத்திற்கு மாற்றித் தருவது பற்றியும் அக்கூட்டத்தில் எடுத்துரைக்கப் பட்டது. கியூபாவைத் தாண்டியும் இந்த தடுப்பூசி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப் பட்டுள்ளது.