world

img

ஹோண்டுரஸில் மீண்டும் இடதுசாரி ஜனாதிபதி

தெகுசிகல்பா, நவ.29- மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 45 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இடதுசாரி வேட்பாளரான சியோமரா காஸ்ட்ரோ பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இடதுசாரிக் கொள்கைகளை முன்னி றுத்தி ஆட்சிக்கு வந்த மனுவேல் ஜெலாயா  12 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க ஆதரவுடன் நடத்தப்பட்ட கலகத்தால் வெளி யேற்றப்பட்டார். நாட்டை விட்டு வெளியேறிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஹோண்டுராஸ் திரும்பினார். அவர் வெளி யேற்றப்பட்டதிலிருந்து அவரது துணைவி யார் சியோமரா காஸ்ட்ரோ அரசியல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார். நவம்பர் 28 ஆம் தேதியன்று நடந்த ஜனாதிபதித் தேர்தலில் லிப்ரே கட்சி வேட்பாளராக சியோமரா காஸ்ட்ரோ வேட்பாளராகக் களமிறங்கினார். கடந்த 100 ஆண்டுகளாக தேசியக் கட்சியும், லிபரல் கட்சியும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்துள்ளன. இரு கட்சிகளுக்கும் தற்போது ஆபத்து வந்துள்ளது. மனுவேல் ஜெலாயா வின் ஆதரவுடன் துவங்கப்பட்ட லிப்ரே கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமரா காஸ்ட்ரோவுக்கும், ஆளும்  தேசியக் கட்சி வேட்பாளர் நஸ்ரி அஸ்புரா வுக்கும் இடையில் போட்டி நிலவியது. வழக்கத்தை விட அதிகமான அளவில்  வாக்குப்பதிவு(68 சதவிகிதம்) நடந்திருக்கிறது. இரு வேட்பாளர்களுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மக்களி டையே புதிய நம்பிக்கை உருவாகியிருப்ப தைக் காட்டுகிறது. வாக்களிக்க விரும்பாத ஒரு பகுதி மக்களும் வாக்குச்சாவடிகளை நோக்கி வந்திருக்கிறார்கள்.

வாக்குகள் எண்ணத் துவங்கியதி லிருந்தே சியோமரா காஸ்ட்ரோ முன்னிலை  வகித்து வருகிறார். 45 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், சியோமரா வுக்கு 53 சதவிகித வாக்குகளும், தேசியக் கட்சி வேட்பாளருக்கு 34 சதவிகித வாக்கு கள் கிடைத்துள்ளன. இந்த நிலை தொடர்ந் தால் ஹோண்டுராசின் முதல் பெண் ஜனாதி பதியாக சியோமரா காஸ்ட்ரோ பொறுப் பேற்றுக் கொள்வார். 

அமைதிக்கான ஆட்சி

நீதி மற்றும் அமைதிக்கான ஆட்சியை அமைப்போம் என்று சியோமரா காஸ்ட்ரோ கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் 128 இடங் களுக்கான தேர்தலும் நடைபெற்றது. இதன் முடிவுகள் பற்றி இதுவரையில் தேர்தல் கவுன்சிலிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.
 

;