world

img

தீக்கதிர் உலக செய்திகள்

போதைப்பொருட்களை  சட்டப்பூர்வமாக்க போப் எதிர்ப்பு 

போதைப்பொருட்களை சட்டப்பூர்வ மாக்குவதை போப் பிரான்சிஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கஞ்சாவிற்கும் பொழுது போக்கிற்காக அமெரிக்காவின் சில பகுதிகளில் அனுமதிக்கப்படும் ஹெராயின், கொக்கைனுக் கும் எந்த வேறுபாடும் இல்லை எனவும்     போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை “கொலையாளிகள்” எனவும் கடு மையாக விமர்சித்துள்ளார். மேலும் போதைக்கு அடிமை யான மனிதர்கள் போதையில் இருந்து மீள  உதவி மற்றும் ஆதரவைக் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

அமெரிக்காவின்  ஆயுதக் கலாச்சாரத்தால்   சுகாதார நெருக்கடி 

அமெரிக்காவின் ஆயுதக்கலாச்சாரத் தால் பொது சுகாதார நெருக்கடி ஏற்பட் டுள்ளதாக மருத்துவ ஜெனரல் விவேக் மூர்த்தி அறிவித்துள்ளார். துப்பாக்கிகள் கிடைப்ப தைக் கட்டுப்படுத்த கடும் சட்டங்களை இயற்ற வேண்டும் எனவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்நாட்டில் பள்ளிகள், பொது இடங்கள் என பல இடங்களில் துப் பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறை நடத்தப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சுகாதார நெருக்கடி ஏற்படுகிறது. 

நேட்டோ அமைப்பிற்கு  புதிய தலைவர் 

நேட்டோ அமைப்பிற்கு புதிய பொதுச் செயலாளராக நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டோ நியமிக்கப்பட்டுள் ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ்- இல் உள்ள நேட்டோ கூட்டமைப்பின் தலைமையகத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர் வரும் அக்டோபர் 1 முதல் முறையாக அப்பொறுப்பை ஏற்பார் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ரஷ்யா நேட்டோவிற்கு இடையிலான போர் அதி கரித்து வரும் சூழலில் இந்த மாற்றம் நடந்துள்ளது குறிப்பி டத்தக்கது.

;