வெனிசுலா, மே 29- வெனிசுலா நாட்டை சேர்ந்தவர் ஜூவான் விசென்டே பெரெஸ் மோரா. இவர் கடந்த வாரம் உலகின் மிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இந்த நிலையில், அவர் சனிக்கிழமை தன்னுடைய 113 வது பிறந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டா டினார். இவ்விழாவின் போது ஜூவானின் நண்பர்கள் உறவினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 1909- ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி வெனிசுலாவின் டாச்சிராவில் உள்ள எல் கோப்ரேயில் பிறந்தார் ஜூவான், யூட்டி கியோ டெல் ரொசாரியோ பெரெஸ் மோரா மற்றும் எடெல்மிரா மோரா தம்பதி யினரின் பத்து குழந்தை களில் ஒன்பதாவது குழந்தை யாக பிறந்தவர் ஜூவான்.