world

img

கியூபா செல்கிறார் அம்லோ

மெக்சிகோ சிட்டி, மே 9- மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் கியூபாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் மெக்சிகோ வின் ஜனாதிபதி ஆண்ட்ருஸ் மானு வல் லோபஸ் ஓப்ரடார் (அம்லோ) பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவிருக்கிறார். ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக குவாதி மாலா, எல் சால்வடார், ஹோண்டு ராஸ், பெலிஸ் மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கு அம்லோ செல்கிறார். தெற்கிலுள்ள நாடுகளுடன் உறவை மேம்படுத்திக் கொள்ளும் உத்தியாகவே அவர் இதைச் செய்கிறார்.  அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஒத்துழைப்பை மேற்கொள்வதன் மூலம் இப்பகுதி யின் வளர்ச்சியையும், பகுதி மக்களின் நலன்களையும் பாதுகாக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.  மக்கள் குடிபெயரும் பிரச்சனையின் ஆழத்தைக் கணக்கில் கொண்டு விவாதிக்க இருப்ப தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெறும் சட்டங்கள் போடுவதால் மக்கள் இடம் பெயர்வதைத் தடுத்து விட முடியாது என்று தான் நம்புவதாகப் பல முறை அம்லோ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.