world

img

நாஜி படைகளுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு

நியூயார்க், ஜூன் 14- உக்ரைன் - ரஷ்யா போரை தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் அமெரிக்கா தற்போது உக்ரைனில் உள்ள நியோ - நாஜி படைக ளுக்கு ஆயுதங்களை கொடுக்க முடி வெடுத்துள்ளது.  உக்ரைனில் ஹிட்லரின் நாஜி கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றி வரும் தீவிரமான வலதுசாரி  ஆயுதப்  படைப்பிரிவாக “அசோவ்” என்ற ராணுவப் படையினர் உள்ளனர். உக்ரைனின் பாதுகாவலர்களாக தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும் இந்த படைப் பிரிவு  மக்கள் மத்தியில் பிற்போக்கான வலதுசாரிய கொள் கையை பரப்பி வருகிறது.  இது குறிப்பாக இனவெறி அடைப்படையில் செயல்பட்டு வரும் படைப்பிரிவாகும். உக்ரைனில் உள்ள ரஷ்ய மற்றும் ஸ்லாவிக் மொழி பேசும் சிறு பான்மை மக்களின்  வாழ்வாதாரத்தை சிதை த்து அவர்களை கொன்று குவித்துள்ளது. இந்தப் பிரிவினருக்கு அமெரிக்கா உற் பத்தி செய்த ஆயுதங்களை கொடுக்க கடந்த 10 ஆண்டுகளாக அமெ.அரசால் தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அமெரிக்கா தான் விதித்த அந்த  தடையை நீக்கியதுடன்  அமெ. நிறு வனங்கள் தங்களது ஆயுதங்களை அசோவ் படைக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. உக்ரைன்- ரஷ்யா போர் துவங்கியதில் இருந்தே அமெரிக்கா இந்த படைப் பிரிவினருக்கு கள்ளச்சந்தை மூலமாக வழங்குகிறது என குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் தற்போது நேரடியாக வழங்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

;