world

img

48,500 ஆண்டுகள் பழமையான ‘ஜோம்பி வைரஸ்’ கண்டுபிடிப்பு

சைபீரியா, டிச.1 -  48,500 ஆண்டுகள் பழமையான ‘ஜோம்பி வைரஸ்களை’ ஐரோப்பா வைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்ட றிந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக  ஆர்டிக், அண்டார்டிகா பனிப் பிர தேசங்களில் உள்ள பனிப்பாறைகள் ஒவ்வொரு நாளும் உருகிக் கொண்டி ருக்கின்றன. இதனால், லட்சக்கணக் கான ஆண்டுகள் புதைத்திருக்கும் ஆபத்தான வைரஸ்கள் வெளியேறும் அபாயம் உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உறைபனி இடத்தில் உள்ள ஏரியில் 48,500 ஆண்டு கள் பழமை வாய்ந்த 10-க்கும் மேற்பட்ட  வைரஸ்களை ஐரோப்பிய விஞ்ஞானி கள் கண்டறிந்துள்ளனர். இந்த வை ரஸ்களை ‘ஜோம்பி வைரஸ்கள்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

இப்போது கண்டறியப்பட்டுள்ள ஜோம்பி வைரஸ்களை உயிர்ப்பித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், “இவை பெரும்பாலும் அமீபா நுண்ணு யிரிகளைப் பாதிக்கும் திறன் கொண்ட வையாக உள்ளன. இவை மனிதர் களைத் தாக்கும் ஆபத்து மிகவும் குறைவு” என ரஷ்யா, ஜெர்மனி மற்றும்  பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த  ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள் ளது. எனினும், புவி வெப்பமடைதல் காரணமாக, நிரந்தர உறைபனி உருகு தல் தீவிரமாகும்போது இதுபோன்ற வைரஸ்களால் மனிதர்களுக்கு ஆபத்து  ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காலநிலை மாற்றத்தினால் உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. வெள்ளம், புயல், அதீத மழையினால் ஆயிரக்கணக்கான உயி ரிழப்புகளும், பொருளாதார இழப்பு களும் ஏற்படுகின்றன. மேலும் ஆர்ட்டிக், அண்டார்டிகா கண்டங்களில்  உள்ள பனிப்பாறைகள் உருகி வருவ தால், உலக நாடுகள் பெரும் அபாயத் தை எதிர்கொள்ள இருப்பதாக விஞ்ஞா னிகள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், காலநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. பல ஆண்டுகளாக செயலற்று இருக்கும் வைரஸ்களை ‘ஜோம்பி வைரஸ்கள்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

;